முதல் போட்டி, முதல் வெற்றி! ரசிகர்களுக்கு நன்றி கூறிய ரொனால்டோ
அல்-எட்டிஃபாக் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ததற்கு ரொனால்டோ ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
ரொனால்டோவின் முதல் போட்டி
சவுதி புரோ லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் அல் நஸர் மற்றும் அல்-எட்டிஃபாக் அணிகள் மோதின.
போர்ச்சுக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நஸர் அணியில் விளையாடும் முதல் போட்டி இதுவாகும். அபாரமாக விளையாடிய அல் நஸர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
@Getty
கோல் அடிக்கவில்லை என்றாலும் ரொனால்டோ தனது யுக்திகளை பயன்படுத்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
ரசிகர்களுக்கு நன்றி
இந்த நிலையில் போட்டி முடிந்ததும் ரொனால்டோ பதிவிட்ட ட்வீட்டில், 'முதல் போட்டி, முதல் வெற்றி - சிறப்பாக முடித்தீர்கள் வீரர்களே. நம்ப முடியாத அளவு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள்' என தெரிவித்துள்ளார்.
First game, first win - well done guys ?? Thanks to all the fans for incredible support. ?? pic.twitter.com/vmgwE8TgVo
— Cristiano Ronaldo (@Cristiano) January 22, 2023