போர்ச்சுக்கலை வீட்டுக்கு அனுப்பிய பெல்ஜியம்! கோபத்தில் கேப்டன் ஆர்மை தூக்கி வீசிய ரொனால்டோவின் வீடியோ காட்சி
யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், பெல்ஜிமிற்கு எதிராக போர்ச்சுக்கல் தோல்வியடைந்த நிலையில் விரக்தியடைந்த ரொனால்டோ தன்னுடைய கேப்டன் ஆர்மை வீசி எறிந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளில் யூரோ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. அதன் முதல் லீக் சுற்று முடிந்து, இரண்டாவது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் படி நேற்றைய ஆட்டத்தில், போர்ச்சுக்கல் அணியும், பெல்ஜியம் அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில், அதாவது 42-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி வீரர் Thorgen Hazard அற்புதமாக கோல் அடித்தார்.
அதன் பின் போர்ச்சுக்கல் அணி எவ்வளவு போராடியும் கோல் அடிக்கவில்லை, அந்தணி 22 முறை கோல் அடிக்க முற்பட்டும், அதை பெல்ஜியம் அணி வீரர்கள் சாதுர்யமாக செயல்பட்டு தடுத்தனர்.
இதனால் ஆட்டத்தின் முடிவில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. கடந்த 2016-ஆம் ஆண்டு சாம்பியன் ஆன, போர்ச்சுக்கல் அணி இந்த முறை கால் இறுதிப் போட்டிக்கு கூ தகுதி பெறாமல் வெளியேறுவதால், இந்த போட்டியின் முடிவுக்கு பின், போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் ஆன, கிறிஸ்டியன் ரொனால்டோ தன்னுடைய கேப்டன் ஆர்மை கடும் கோபத்தில் தூக்கி வீசினார்.
Ronaldo dropped and kicked the Captain’s armband away... pic.twitter.com/FKSQr1b8o1
— MC (@CrewsMat19) June 27, 2021
இது தொடர்பான வீடியோ காட்சி பதிவாகியுள்ளது.
மேலும் ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கு ஒரு முறை இந்த தொடர் நடைபெறும் என்பதால், இது தான் ரொனால்டோவுக்கு கடைசி யூரோ போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ரொனால்டோவுக்கு தற்போது 36 வயது, இப்போது அவர் உடல் நல்ல பிட்டாக வைத்திருந்தாலும், அடுத்த யூரோ கால்பந்தில் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான்.