சவுதி அரேபிய அணியில் இருந்து வெளியேறும் ரொனால்டோ! முடிக்கப்படாத வேலை இருப்பதாக சூசகம்
கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிர்காலத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பயிற்சியாளராக அல்லது மேலாளராக திரும்பலாம் என தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இரண்டாம் வருகை
மான்செஸ்டர் யுனைடெட் அணி என்றாலே அது கிறிஸ்டியானோ ரொனால்டோ என அறியப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால் அங்கிருந்து வெளியேறி, பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பிய ரொனால்டோவுக்கு இரண்டாம் வருகை திட்டமிட்டபடி கைகொடுக்கவில்லை.
இதனையடுத்து இருதரப்பு ஒப்புதலுடன் அங்கிருந்து வெளியேறினார். தற்போது 39 வயதாகும் ரொனால்டொ சவுதி அரேபியாவின் Al-Nassr அணியில் விளையாடி வருகிறார்.
ஆனால் தமது எதிர்கால திட்டம் குறித்து ரொனால்டோ இதுவரை வெளிப்படையாக கருத்தேதும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் ரொனால்டோ குறித்து அவரது முன்னாள் அணி சக வீரர் லூயிஸ் சாஹா தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ரொனால்டோ கட்டாயம் திரும்புவார் என்றும், அது மேலாளர் பொறுப்பாக இருக்கலாம் அல்லது பயிற்சியாளராக அவர் திரும்பலாம் என்றார்.
இன்னொரு தொடர்
அது Al-Nassr அணியில் இருந்து வெளியேறும் முடிவா அல்லது, சவுதி அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னரா என்பது குறித்து சாஹா வெளிப்படுத்தவில்லை.
மான்செஸ்டர் யுனைடெட் அணியில் முடிக்கப்படாத வேலை இருப்பதாக ரொனால்டோ தம்மிடம் கூறியதாக சாஹா தெரிவித்துள்ளார். Al-Nassr அணியில் இணைந்த பின்னர், அந்த அணிக்காக 35 கோல்களை ரொனால்டோ பதிவு செய்துள்ளார்.
அந்த அணிக்காக இன்னொரு தொடர் விளையாடுவார் என்றே கூறப்படுகிறது. அதன் பின்னர் என்ன செய்யப் போகிறார் என்பதே மர்மமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |