சர்வதேச போட்டிகளில் புதிய சாதனை படைக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
கிறிஸ்டியானோ ரொனால்டோ 200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.
197-வது கால்பந்தாட்ட போட்டி
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) சமீபத்தில் தனது 197-வது கால்பந்து போட்டியை சர்வதேச அளவில் விளையாடினார்.
இதன் மூலம், ஆடவர் கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் 100 கோல் அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்த 2 வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஒருவர் ஆவார். அதிலும் குறிப்பாக 120 கோல்களுடன் அவர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
AP
புதுப்புது சாதனைகள்
38 வயதான ரொனால்டோ தனது கால்பந்தாட்ட விளையாட்டு வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார் என்று கூறலாம். ஆனால் இப்போதும் புதுப்புது சாதனைகளை மைல்கல்லை அவர் எட்டிவருகிறார்.
ரொனால்டோ இன்னும் 3 போட்டிகளில் விளையாடினால், 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
இந்த ஆண்டு நட்பு மற்றும் தகுதிச் சுற்றுகளுடன், அந்த மைல்கல்லை மிக விரைவில் எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம், அது நடக்கும் போது அது பெரிய விஷயமாக இருக்கும்.
UEFA
இதற்கிடையில், ரொனால்டோவின் போட்டியாளரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) 173 ஆட்டங்களில் விளையாடி 99 கோல்களை அடித்துள்ளார்.
அதேபோல், பெண்கள் கால்பந்தில், முன்னாள் அமெரிக்க கால்பந்தாட்ட வீராங்கனை கிறிஸ்டின் லில்லி (Kristine Lilly) 354 போட்டிகளுடன் இந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.