காதலியின் கையில் வெற்றிக்கோப்பையை கொடுத்த ரொனால்டோ: வைரலான புகைப்படம்
போர்த்துக்கல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று பதிவிட்ட புகைப்படம் 83 மில்லியன் பார்வைகளை கடந்தது.
போர்த்துக்கல் சாம்பியன்
தேசிய லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் அணி ஸ்பெயின் அணியுடன் மோதியது.
இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. அதன் பின்னர் பெனால்டிஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது.
அதில் போர்த்துக்கல் (Portugal) அணி 5-3 என்ற கணக்கில் ஸ்பெயின் (Spain) அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இரண்டாவது முறையாக போர்த்துக்கல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றிக் கோப்பையுடன்
இதனைத் தொடர்ந்து, ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸுடன் சேர்ந்து வெற்றிக்கோப்பையுடன் போஸ் கொடுத்தார்.
🏆❤️ pic.twitter.com/UuHkAHP3X1
— Cristiano Ronaldo (@Cristiano) June 9, 2025
இந்த புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இதுவரை இந்தப் புகைப்படம் 83.3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
ரொனால்டோவும், ஜார்ஜியாவும் ஒன்றாக வாழ்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |