கதறி அழுத பிரபல வீரர்.. கால்பந்து எனக்கு இந்த சகோதரரை தந்தது என உருகிய ரொனால்டோ
ரியல் மாட்ரிட் அணியை விட்டு விலகிய மார்செலோ வியேரா குறித்து பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிரேசிலை சேர்ந்த கால்பந்து வீரர் மார்செலோ வியேரா, ரியல் மாட்ரிட் கிளப் அணியில் 16 ஆண்டுகளாக விளையாடி வந்தார். அதே அணியில் விளையாடி பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நெருங்கிய நண்பராக மார்செலோ மாறினார்.
இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணியை விட்டு 34 வயதாகும் மார்செலோ விலகுகிறார். இதற்காக வைக்கப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் மார்செலோ கதறி அழுதார். அவர் ரியல் மாட்ரிட் அணிக்காக 546 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சக வீரரும், நெருங்கிய தோழருமாக இருந்த மார்செலோ விலகுவது குறித்து ரொனால்டோ உருக்கத்துடன் ட்வீட் செய்துள்ளார்.
அதில், 'ஒரு சக வீரரை விட, கால்பந்து எனக்கு ஒரு சகோதரரை வழங்கியது. களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மிகப் பெரிய நட்சத்திரமான ஒருவரிடம் பழகியதும், ஒரே லாக்கர் அறையைப் பகிர்ந்து கொள்வதிலும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த புதிய சாகச பயணத்தில் அனைத்தையும் கொண்டு செல்லுங்கள் மார்செலோ' என தெரிவித்துள்ளார்.
Mais do que um companheiro de equipa, um irmão que o futebol me deu. Dentro e fora dos campos, um dos maiores craques com quem tive o prazer de partilhar um balneário. Vai com tudo nessa nova aventura, Marcelo! ?????? pic.twitter.com/Rjgb5R3DAd
— Cristiano Ronaldo (@Cristiano) June 13, 2022
Marcelo says an emotional farewell to Real Madrid ?? pic.twitter.com/e0vINiTaR0
— ESPN FC (@ESPNFC) June 13, 2022