ரொனால்டோ விடயத்தில் அதிரடி திருப்பம்... விதிவிலக்கு அளித்த சவுதி அரேபியா: நிம்மதியடைந்த ரசிகர்கள்
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதி சவுதி அரேபியாவில் ஒன்றாக வாழ அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொனால்டோவுக்கு விதிவிலக்கு
திருமணம் செய்துகொள்ளாத தம்பதிகள் ஒன்றாக வாழ சவுதி அரேபியாவில் சட்டம் அனுமதிக்காத நிலையில், ரொனால்டோவுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
@shutterstock
சவுதி அரேபியாவின் அல் நஸர் கால்பந்து அணியில் ஜாம்பவான் ரொனால்டோ சமீபத்தில் இணைந்துள்ளார். இரண்டரை ஆண்டு காலம் குறித்த அணியில் விளையாடவிருக்கும் ரொனால்டோவுக்கு அல் நஸர் நிர்வாகம் ஆண்டுக்கு 175 பவுண்டுகள் ஊதியமாக அளிக்க உள்ளது.
செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக அல் நஸர் அணி அறிமுக விழாவையும் மிக ஆடம்பரமாக முன்னெடுத்தது. இந்த நிலையில், ரொனால்டோவுடன் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் மற்றும் இவர்களின் 5 பிள்ளைகளும் ரியாத் நகருக்கு குடிபெயர உள்ளனர்.
ரொனால்டோ- ஜார்ஜினா தம்பதியானது இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த நிலையில், சவுதி அரேபியா நிர்வாகம் ரொனால்டோ தம்பதியை ஒன்றாக வாழ அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
ஒரே குடியிருப்பில் தங்குவார்கள்
மட்டுமின்றி, சவுதி அரேபியா தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது எனவும், இதனால் அல் நஸர் அணியில் அவர் விளையாடுவது சந்தேகமே எனவும் கூறப்பட்டது. ஆனால், சவுதி அரேபியா நிர்வாகம் ரொனால்டோ விவகாரத்தில் விதிவிலக்கு அளித்துள்ளதுடன், ரொனால்டோ தம்பதி தங்கள் பிள்ளைகளுடன் ஒரே குடியிருப்பில் தங்குவார்கள் என அறிவித்துள்ளது.
@afp
இருப்பினும், சட்ட சிக்கல் அல்லது குற்றவியல் நடவடிக்கை ஏதேனும் நடந்தால், தொடர்புடைய சட்டத்தை சவுதி அரேபியா அமுல்படுத்தும் என்றே கூறுகின்றனர். 2016ல் இருந்தே ரொனால்டோ- ஜார்ஜினா தம்பதி ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அத்துடன் வாடகைதாயார் மூலம் பெற்றெடுத்த இரண்டு இரட்டையர்கள் உட்பட ரொனால்டோவுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.
இந்த களேபரங்களுக்கு நடுவே, ரொனால்டோ இதுவரை எங்கே தாம் குடியிருக்க போகிறோம் என்பதை உறுதி செய்யவில்லை.
தற்போது ரியாத் நகரில் அமைந்துள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் ரொனால்டோ குடும்பம் தங்கி வருகிறது என்றே தெரியவந்துள்ளது.