அப்பா உன்னை எப்போதும் காதலிக்கிறேன்! ரொனால்டோவின் நெகிழ்ச்சி பதிவு
போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மகளின் முதல் பிறந்தநாளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
ரொனால்டோவின் மகள்
கால்பந்து உலகில் ஜாம்பவான் வீரராக வலம் வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நஸர் அணியில் விளையாடி வருகிறார்.
சொந்த வாழ்வைப் பொறுத்தவரை அவர் தனது காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸ் மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
ரொனால்டோவின் மகள் Bella Esmeralda இன்று தனது முதல் பிறந்தநாளை எட்டியுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ரொனால்டோ தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Parabéns pelo teu primeiro ano de vida, meu amor. O papá ama-te muito!?♥️? pic.twitter.com/FBHMAjiuYE
— Cristiano Ronaldo (@Cristiano) April 18, 2023
மகளுக்கு வாழ்த்து கூறிய ரொனால்டோ
அத்துடன் அவரது பதிவில், 'என் அன்பே, உன் வாழ்வின் முதல் ஆண்டை எட்டியுள்ளதற்கு வாழ்த்துக்கள். அப்பா உன்னை விரும்புகிறேன்' என கூறியுள்ளார்.
அல்-அடலாஹ் அணிக்கு எதிரான போட்டியில் அல்-நஸர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதில் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்து மிரட்டி இருந்தார்.
(Ronaldo Instagram)
இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள போட்டியில், அல்-ஹிலால் அணியை ரொனால்டோவின் அல்-நஸர் அணி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
@Twitter