2வது ஆஷஸ் டெஸ்டில் பீல்டிங் செய்ய வராத ஜோ ரூட்! என்ன காரணம்?
அடிலெய்டில் நடைபெற்று வரும் 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 4வது நாளான இன்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பீல்டிங் செய்ய வராதது அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
முதல் ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வீழ்த்திய நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் அடிலெய்டில் இரவு-பகல் போட்டியாக டிசம்பர் 16ம் திகதி தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்திருந்து போது டிக்ளர் செய்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 236 ரன்களுக்கு சுருண்டது.
இன்று நான்காவது நாள் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அவுஸ்திரேலிய அணி 2வது இன்னங்ஸில் விளையாடி வருகிறது.
நான்காவது பீல்டிங் செய்ய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் வராதது அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
நான்காவது நாள் போட்டி தொடங்குவதற்கு முன் ஜோ ரூட் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பந்து வயிற்றில் தாக்கியதாக இங்கிலாந்து அணி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது இங்கிலாந்து மருத்துவக் குழுவால் பரிசோதிக்கப்பட்டு வருகிறார் என செயதித் தொடர்பாளர் தகவல் தெரவித்துள்ளார்.