சதம் விளாசிய மகன்கள்.. கட்டித்தழுவிய தந்தையர்கள்: நெகிழ்ச்சி தருணம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் போப் மற்றும் ஜோ ரூட்டின் தந்தையர்கள் பார்வையாளர்கள் பகுதியில் கட்டித் தழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நாட்டிங்காமில் நடந்தது.
நாட்டிங்காமின் டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் 2வது போட்டி நடந்து வருகிறது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி வருகிறது. வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்த ஓலி போப் - ஜோ ரூட் ஆகிய இருவரும் சதம் விளாசினர்.
ஓலி போப் 145 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஜோ ரூட் 163 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
Beautiful moment from today ❤️
— England’s Barmy Army (@TheBarmyArmy) June 12, 2022
The fathers of Ollie Pope and Joe Root embrace as both their sons reach ? for ???????#ENGvNZ pic.twitter.com/r2j13MKyjh
முன்னதாக, போப், ரூட் ஆகியோரது தந்தையர்கள் போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்தனர். ஜோ ரூட் தனது 27வது சதத்தை விளாசிய பின் பேட்-ஐ தூக்கி கொண்டாடும்போது போப்பின் தந்தையும், ரூட்டின் தந்தையும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்கள் மகன்களின் சதங்களை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைக் கண்ட ரசிகர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
Photo Credit: Tom Jenkins/The Guardian
Photo Credit: Reuters
இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 473 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அந்த அணி 80 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது.
Photo Credit: AP