கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் கோஹ்லியை பின்னுக்கு தள்ளிய வீரர்! யார் அவர் தெரியுமா?
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கோஹ்லியை விட, இங்கிலாந்து வீரர்கள் சிலர் அதிகம் சம்பளம் வாங்குவது தற்போது தெரியவந்துள்ளது.
உலகின் கிரிக்கெட் வீரர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் என்றால், பலரும் இப்போது கோஹ்லியை தான் கூறுவர். ஏனெனில், அவர் கிரிக்கெட் உலகில் படைத்து வரும் சாதனை காரணமாக, அவருக்கு விளம்பரங்கள், பிராண்ட் அம்பாசிடர், தூதுவர் என பல வழிகளில் பணம் கோடிக்கணக்கில் கொட்டி வருகிறது.
பிசிசிஐ அவருக்கு ஆண்டிற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கிறது. ஐபிஎல் தொடரில் கோஹ்லி 17 கோடி ரூபாய் ஆண்டிற்கு வாங்குவது வேறு கதை. அதுவே சர்வதேச அளிவில் கிரிக்கெட் வாரியம்(2020/2021-ஆம் ஆண்டு கணக்கின் படி) கேப்டன்களுக்கு கொடுக்கும் சம்ளத்தை வைத்து பிரபல ஊடகம் ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், இங்கிலாந்து வீரரும், கேப்டனுமான ஜோ ரூட் ஆண்டிற்கு 7 லட்சம் பவுண்டுகளை சம்பளமாக வாங்குகிறார். அதாவது இந்திய மதிப்பில் அது 8 கோடிக்கு மேல் வருகிறது.
அதே போன்று வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரும், கோஹ்லியை விட அதிகம் சம்பளம் வாங்குகிறாராம்.
இதனால் கேப்டன்களில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லியை ஜோ ரூட் பின்னுக்கு தள்ளியிருந்தாலும், கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற வகைகளில் கோஹ்லியே அதிகம் சம்பளத்தை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.