கைக்கு வந்த கேட்ச்சை கோட்டை விட்ட இங்கிலாந்து வீரர்! தப்பிய ரோகித்: வெளியான வீடியோ
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் கைக்கு வந்த கேட்சை இங்கிலாந்து வீரர் கோட்டை விட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 71 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
Burns was sleeping ??? pic.twitter.com/AfG6laz9sT
— msc media (@mscmedia2) September 3, 2021
இந்நிலையில், இப்போட்டியின் போது நேற்றைய ஆட்டத்தின் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த போது, மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தை ஆண்டர்சன் வீச, அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் அதை தடுத்து ஆட முற்பட்டு, சிலிப் திசையில் சென்றது. அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் Rory Burns கைக்கு வந்த கேட்சை கோட்டை விட்டார்.
ஏதோ வேறு எங்கோ பந்து செல்வது போன்று செய்கை செய்தார்.
இதன் மூலம் 6 ஓட்டத்தில் இருந்து தப்பிய ரோகித் தற்போது 31 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.