இந்தியாவுடன் மோதி...இங்கிலாந்துக்கு மிக மோசமான சாதனையை தேடித் தந்த 2 வீரர்கள்! கெத்து காட்டிய பும்ரா-ஷமி
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து துவக்க வீரர்கள் டக் அவுட் ஆகி வெளியேறியதால், மிகவும் மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் ஆகியுள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே லார்ட்ஸில் நடைபெற்று முடிந்த 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்காக களம் இறங்கிய துவக்க வீரர்கள் ரோரி பார்ன்ஸ் மற்றும் டாமினிக் சிப்லி வந்த வேகத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் சிக்கி டக் அவுட் ஆனர்கள்.
பர்ன்ஸ் பும்ரா பந்துவீச்சிலும், மற்றும் சிப்லி முகமது சமி பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர்.
இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் தனது சொந்த மைதானத்தில் துவக்க வீரர்கள் 2 பேர் முதல் முறையாக டக் அவுட் ஆகி வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளனர்.
இதில், ரோரி பார்ன்ஸ் இந்த ஆண்டு 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.