குழந்தைகள் விரும்பி உண்ணும் ரோஸ் புட்டிங்.., எப்படி செய்வது?
புடிங் என்றால் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி உண்ணும் ரோஸ் புட்டிங் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- ½ லிட்டர்
- சோள மாவு- 5 ஸ்பூன்
- ரோஸ் சிரப்- ½ கப்
- சர்க்கரை- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் பால் சேர்த்து சூடானதும் அடுப்பை அனைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கிண்ணத்தில் சோள மாவு மற்றும் ஒரு கப் காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

அடுத்து சூடுபடுத்திய பாலில் கரைத்த சோள மாவு, ரோஸ் சிரப் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து மீண்டும் அடுப்பில் வைத்து கைவிடமால் கிளறவும்.
இறுதியாக நன்கு கெட்டியாகி வந்ததும் அடுப்பை அனைத்து இதனை ஒரு கிண்ணத்தில் போட்டு 4 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தால் ரோஸ் புட்டிங் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |