பளபளப்பான சருமம் வேண்டுமா? அப்பே பன்னீரை இப்படி பயன்படுத்துங்க!
beauty tips
rose water
By Kishanthini
ரோஜா மலர் பொதுவாக முகத்திற்கு மென்மையும் பொலிவும் தருவதுடன் சருமத்திற்கும் பலநன்மைகளை அளிக்கக்கூடியது .
இதன் இதழ்களில் அடங்கியுள்ள வைட்டமின் சி, சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. இதனை வெயில் காலங்களில் பயன்படுத்தும் போது சருமத்திற்கு பலவகையில் நன்மை அளிக்கின்றது.
இதனை முகத்திற்கு பயன்படுத்துவதனால் பலவித நன்மைகள் அளிக்கின்றது. அந்தவகையில் தற்போது பன்னீரை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
- கண்களில் ஏற்படும் கருவளையம், வெப்பத்தால் ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், முகப்பரு முகத்தழும்புகள் தோலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு பன்னீர் அருமருந்து.
- சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும பிரச்சனைகள் நீங்க, பன்னீருடன் கற்றாழை ஜெல்லை கலந்து சருமத்தில் தேய்ந்து 20 நிமிடம் கழித்து நீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
- உதடுகள், ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் காட்சியளிக்க, பன்னீரை உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்க. இவ்வாறு செய்தால் உதடுகள் மீதுள்ள கருமை நிறம் மறைந்து அழகுக்கு அழகு சேர்க்கும்.
- பன்னீருடன் வெந்தய விழுதையும் கிளிசரினையும் சேர்த்து கலந்து முடியின் வேர் பகுதியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசினால் பொடுகுத்தொல்லை நீங்கி கூந்தல் பொலிவாகும்.
- பன்னீருடன் சந்தனப்பொடி, தேன் சோர்த்து குழைத்து உடலில் குறிப்பாக முகத்தில் தடவினால் சரும சுருக்கங்கள் நீங்கி, இளவை உங்கள் உடலில் இளைப்பாறுவதை உணரலாம்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US