முக சுருக்கம் மற்றும் கருவளையம் போகணுமா?
தற்போதைய காலகட்டங்களில் எல்லோருக்கும் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை. அந்த வகையில், வீடுகளில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து நாம் சருமத்தை பாதுகாக்க கூடிய சில எளிய வழிகளை பார்க்கலாம்.
அதாவது, வீட்டில் இருக்கக்கூடிய ரோஸ் வாட்டர், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் இந்த மூன்று பொருட்கள் இருந்தாலே போதும். நம் சருமத்திற்கு உடனடியாக புத்துணர்ச்சி அடைய செய்ய முடியும். சிலருக்கு இரவில் தூக்கம் இல்லாமலும் அல்லது எப்பொழுதும் கணினி முன்பாக இருப்பதினாலோ கருவளையம், மற்றும் வயது அதிகரிப்பு காரணமாக சுருக்கங்கள் இவைகள் எல்லாம் வருவது இயல்பு.
அந்த நேரங்களில் நாம் அதனை பராமரிக்கும் பொழுது தான் ஒரு நல்ல சருமத்தை பெறலாம். அந்த வகையில், நாம் ரோஸ் வாட்டர் பயன்படுத்தும் பொழுது நம்முடைய சருமத்திற்கு புத்துணர்ச்சியும், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் நம்முடைய சருமத்தில் ஈரப்பதத்தையும் கொடுக்கிறது.

எப்படி பயன்படுத்துவது?
இந்த மூன்று பொருளையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு கலந்து கொள்ள வேண்டும். பிறகு முகத்தை சுத்தமாக கழுவி இந்த கலவையை சருமத்தின் மீது தடவிக்கொள்ள வேண்டும். முடிந்தவரை கலவையை கண்களுக்குள் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு கீழே தடவும் பொழுது அழுத்தம் கொடுக்காமல் தடவுவது அவசியம்.
இந்த கலவையை முகத்தில் தடவிக் கொள்வதற்கு முன்பாக சிறிதாக கழுத்து அல்லது காது பகுதிகளில் தடவி ஏதேனும் எரிச்சல் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறதா என்பதை பார்த்து பின்பு முகத்தில் தடவிக் கொள்வது அவசியம்.

இது கருவளையம் மற்றும் சுருக்கங்களை நீக்குமா?
ரோஸ் வாட்டர், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் கலவையானது நம்முடைய கருவளையம் அல்லது சுருக்கங்களை நிரந்தரமாக நீக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும் இந்த கலவை நம்முடைய சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குவதோடு பராமரிக்க உதவியாக அமைகிறது.
திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டும் அல்லது ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் அப்பொழுது கருவளையம் அல்லது முகம் புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்ற சமயத்தில் கட்டாயமாக இந்த கலவையை நீங்கள் முகத்தில் தடவிக் கொள்ளலாம். அவை உங்களுக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சியும் ஈரப்பதமான் சருமத்தையும், நல்ல பொலிவும் கருவளையத்தை குறைத்தும் காண்பிக்க கூடிய ஒரு தன்மையை உருவாக்கும்.