பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற இந்த ஒரு எண்ணெய் போதும்: எப்படி பயன்படுத்துவது?
உணவு பழக்கவழக்கங்கள், ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள், ஹார்மோன் பிரச்சனைகள் காரணமாக தலைமுடி பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் மென்மையான கூந்தலை பெற பெரிதளவில் உதவுகின்றது.
அந்தவகையில், பட்டுபோன்ற மென்மையான கூந்தலை பெற ரோஸ்மேரி எண்ணெய் ஹேர்பேக் போதும்.
தேவையான பொருட்கள்
- ரோஸ்மேரி எண்ணெய்- 15 துளிகள்
- தேங்காய் எண்ணெய்- ½ கப்
- தேன்- 1 ஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பவுலில் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்க்க நன்றாக கலக்கவும்.
இப்போது தேங்காய் எண்ணெயை சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து 15 துளிகள் ரோஸ்மேரி எண்ணெயைச் சேர்க்கவும்.
தலைமுடி சுத்தமாக சற்று ஈரமாக்கி இந்த எண்ணெயை வேர்களில் இருந்து தொடங்கி அடி வரை தடவி 10 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யவும்.
அதன் பின்னர் 30 நிமிடங்கள் இருக்க வேண்டும். பிறகு தலைமுடியை மென்மையான ஷாம்பூவை கொண்டு கழுவ வேண்டும்.
ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் முடியை வலுப்படுத்தவும்.
இந்த எண்ணெய் புத்துணர்ச்சியூட்டும் வாசனையை வழங்குவது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியையும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |