விராட் கோலி குறித்த பதிவால் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை வர்ணனையாளர்!
விராட் கோலிக்கு பதிலாக சுப்மன் கில் ஆசியக்கோப்பையில் விளையாடுவார் என பதிவிட்ட இலங்கை வர்ணனையாளர்
கோலி குறித்த பதிவு போலியானது என மன்னிப்பு கேட்ட ரோஷன் அபேசிங்கே
ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விராட் கோலி விலகுவதாக இலங்கை வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கே பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். துடுப்பாட்டத்தில் தடுமாறி வரும் அவர், இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கை வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கே ட்வீட் செய்தார். அதில், 'விராட் கோலி காயம் காரணமாக விலகுகிறார். அவருக்கு பதிலாக சுப்மன் கில் இந்திய அணியில் இடம்பெறுவார்' என கூறியிருந்தார்.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த விடயம் சர்ச்சையான நிலையில், அந்த பதிவை நீக்கிய ரோஷன் அபேசிங்கே மீண்டும் ஒரு ட்வீட் செய்தார். அந்த ட்வீட்டில், மன்னித்து விடுங்கள் அந்த செய்து போலியானது. குறித்த ட்வீட் நீக்கம் செய்யப்பட்டது என கூறியுள்ளார்.
Sorry Virat's news is fake. Tweet has been deleted.
— Roshan Abeysinghe (@RoshanCricket) August 25, 2022