ருத்ர தாண்டவமாடி சதமடித்த வீரர்! எதிரணிக்கு கூடுதல் 5 ஓட்டங்கள்.. நடுவர் கூறிய வித்தியாசமான காரணம்
ரோஸோவ்வுக்கு இது 2வது சர்வதேச டி20 சதம் ஆகும்
அதிரடியில் மிரட்டிய ரோஸோவ் 56 பந்துகளில் 8 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் எடுத்தார்
தென் ஆப்பிரிக்க வீரர் ரிலீ ரோஸோவ் கேட்ச் ஆன நிலையில் விக்கெட் கீப்பர் விதியை மீறியதால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது.
சிட்னியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
கேப்டன் பவுமா அவுட் ஆன நிலையில், ரோஸோவ் மற்றும் டிகாக் இருவரும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிக்ஸர்களை பறக்கவிட்ட ரோஸோவ், அதிவேக அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 52 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
முன்னதாக, ஷகிப் அல் ஹசன் வீசிய ஓவரின்போது நடுவர்கள் கூடி பேசினர். பின் தென் ஆப்பிரிக்காவுக்கு கூடுதலாக 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. இதனால் ஷகிப் உட்பட வங்கதேச வீரர்கள் குழப்பமடைந்தனர்.
அதன் பின்னர் நடுவர்கள் அதற்கான காரணத்தை விளக்கினர். அதாவது, பந்துவீசும் போது விக்கெட் கீப்பர் நகராமல் இருக்க வேண்டும். ஆனால் நுருல் ஹசன் பின்னோக்கியும், இடதுபுறமாகவும் நகர்ந்தபடி இருந்தார். ஐசிசி விதிகளின் படி இது தவறு என்பதால் எதிரணிக்கு கூடுதலாக 5 ஓட்டங்கள் வழங்கப்பட்டது.
ICC
மறுமுனையில் வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்த டிகாக் 38 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
What an innings ?
— Proteas Men (@ProteasMenCSA) October 27, 2022
What a player @Rileerr ?
Back-to-back T20I ?#SAvBAN #T20WorldCup #BePartOfIt pic.twitter.com/t4EYTMzwZp