சிக்ஸர் மழை பொழிந்த வீரர்! டி20யில் 243 ஓட்டங்கள் இலக்கை அசால்டாக எட்டிய அணி
பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் அணி 243 ஓட்டங்கள் வெற்றி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் சல்மி அணியை வீழ்த்தியது.
லீக் போட்டி
PSL தொடரின் நேற்றைய போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் சல்மி அணிகள் மோதின. ராவல்பிண்டியில் நடந்த இந்தப் போட்டியில் பெஷாவர் சல்மி அணி முதலில் துடுப்பாடியது.
தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் அசாம், சைம் அயூப் இருவரும் எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இவர்களது கூட்டணி 11.4 ஓவரில் 134 ஓட்டங்கள் குவித்தது. 58 (33) ஓட்டங்கள் எடுத்திருந்த அயூப் அவுட் ஆனதைத் தொடர்ந்து, அரைசதம் கடந்த பாபர் 73 (39) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
HAMMERED by Azmatullah ?#SabSitarayHumaray l #HBLPSL8 l #PZvMS pic.twitter.com/wtbEVxX46k
— PakistanSuperLeague (@thePSLt20) March 10, 2023
பின்னர் களமிறங்கிய முகமது ஹாரிஸ் அதிரடியாக 35 (11) ஓட்டங்களும், கேட்மோர் 38 (18) ஓட்டங்களும் விளாசினர். இதன்மூலம் பெஷாவர் அணி 242 ஓட்டங்கள் குவித்தது. அப்பாஸ் அஃப்ரிடி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இமாலய இலக்கு
மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய முல்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஷான் மசூட் 5 ஓட்டங்களிலும், ரிஸ்வான் 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய ரோஸ்சௌவ் மற்றும் பொல்லார்ட் சிக்ஸர்களை பறக்க விட்டனர். பொல்லார்ட் 25 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.
B A N G ⚡️#SabSitarayHumaray l #HBLPSL8 l #PZvMS pic.twitter.com/t4067D24Qh
— PakistanSuperLeague (@thePSLt20) March 10, 2023
ரோஸ்சௌவ் ருத்ர தாண்டவம்
அவரது விக்கெட்டுக்கு பிறகு ருத்ர தாண்டவம் ஆடிய ரோஸ்சௌவ், சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார். இதன்மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மறுமுனையில் டிம் டேவிட் (2), குஷ்தில் ஷா (18) ஆட்டமிழந்தனர். வாணவேடிக்கை காட்டிய ரோஸ்சௌவ் 51 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 121 ஓட்டங்கள் விளாசினார்.
6⃣ more ?#SabSitarayHumaray l #HBLPSL8 l #PZvMS pic.twitter.com/i2rS9IxZWG
— PakistanSuperLeague (@thePSLt20) March 10, 2023
கடைசி கட்டத்தில் அன்வர் அலி 8 பந்தில் 24 ஓட்டங்களும், உஸமா மிர் 3 பந்தில் 11 ஓட்டங்கள் விளாசி, 19.1 ஓவரில் அணியை வெற்றி பெற வைத்தனர். பெஷாவர் அணி தரப்பில் ஓமர்சாய் 2 விக்கெட்டுகளும், முஜீப், அர்ஷத், வாஹப் மட்டும் அயூப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
? Multan ka Sultan ? #SabSitarayHumaray l #HBLPSL8 l #PZvMS pic.twitter.com/FKgBqrNi6c
— PakistanSuperLeague (@thePSLt20) March 10, 2023
அதிரடி சதம் விளாசிய ரோஸ்சௌவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் முல்தான் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.