மேகன் மெர்க்கல் கொடுமைக்காரி என்றவர்... மன்னர் சார்லஸ் கையால் சிறப்பு கெளரவம்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலை கொடுமைக்காரி என கடுமையாக விமர்சித்த நபருக்கு மன்னர் சார்லஸ் புத்தாண்டில் கெளரவ பட்டமளிக்க இருக்கிறார்.
மேகன் மெர்க்கல் கொடுமைக்காரி
பிரித்தானிய ராஜகுடும்பத்திற்கு அளித்துள்ள சேவையை பாராட்டியே Jason Knauf என்பவருக்கு Lieutenant of the Royal Victorian Order (RVO) என்ற பட்டம் அளிக்கப்படுகிறது. ஹரி - மேகன் தம்பதியுடன் பிரித்தானிய ராஜகுடும்பத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் Jason Knauf.
@pa
இதனைத் தொடர்ந்து 2021 வரையில் இளவரசர் வில்லியம்- கேட் தம்பதியுடனும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையிலேயே, ராஜகுடும்பத்திற்கு சிறப்பாக சேவையாற்றியவர்கள் பட்டியலில் இடம்பெற்ற Jason Knauf, தற்போது மன்னரால் கெளரவிக்கப்பட இருக்கிறார்.
ஹரி- மேகன் தம்பதியுடன் பணியாற்றி வந்த காலகட்டத்தில் தான் மேகன் தொடர்பில் இளவரசர் வில்லியத்திடம் தமது கவலையை பதிவு செய்துள்ளார் Jason Knauf.
அரண்மனையில் பணியாற்றும் இளம் ஊழியர்களை மேகன் மெர்க்கல் துன்பப்படுத்துவதாகவும் கொடுமைக்காரியாக செயல்படுவதாகவும் அவர் 2018ல் மின் அஞ்சல் மூலமாக புகார் அளித்துள்ளார்.
@getty
மேகன் மெர்க்கலின் துன்புறுத்தலுக்கு இருவர் இலக்கானதாக அப்போது Jason Knauf தமது புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தமது பார்வையின் வட்டத்தில் எவரேனும் ஒரு ஊழியர் இருக்கும்படி மேகன் மெர்க்கல் கட்டாயப்படுத்தியதாகவும், நம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஒரு ஊழியரை மேகன் மெர்க்கல் துன்புறுத்தியதாகவும் Jason Knauf தமது புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கெஞ்சிய இளவரசர் ஹரி
ஆனால், எதுவும் தங்களை பாதிக்காது போலவே தாங்கள் நடந்து கொண்டதாகவும் Jason Knauf குறிப்பிட்டிருந்தார். ஆனால், இவ்வாறான செயற்பாடுகள் எதுவும் மேகன் மெர்க்கல் வசமிருந்து நடந்ததில்லை எனவும், இவை இட்டுக்கட்டிய கதைகள் எனவும் மேகன் மெர்க்கலின் தரப்பு வாதிட்டுள்ளது.
@getty
மேலும், ஒருகட்டத்தில் Jason Knauf- ஐ சந்தித்து புகார் அளிக்க வேண்டாம் என இளவரசர் ஹரி கெஞ்சியதாகவும் கூறப்பட்டது, அதையும் ஹரி தரப்பு இட்டுக்கட்டிய கதை என நிராகரித்தது.
உண்மையில் ஹரி- மேகன் மெர்க்கல் தம்பதிக்கு எதிராக சதிவலை தீவிரமாக பின்னப்பட்டது என்பதின் ஒரு சான்று இந்த Jason Knauf என அப்போதே கூறப்பட்டது.
தற்போது மன்னர் சார்லஸ் புதிய பட்டமளித்து அவரை கெளரவிக்க இருப்பது, பிரித்தானிய அரண்மனையில் உண்மையான முகம் எனவும் கூறுகின்றனர்.