மன்னர் சார்லஸின் பெருந்தன்மை... இன்ப அதிர்ச்சியில் நூற்றுக்கணக்கான அரண்மனை ஊழியர்கள்
விலைவாசி நெருக்கடியால் அவதிப்படும், மிக குறைந்த ஊதியம் பெறும் நூற்றுக்கணக்கான அரண்மனை ஊழியர்களுக்கு மன்னர் சார்லஸ் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
பிரித்தானிய ராஜகுடும்பத்தில் பணியாற்றும் குறைந்த ஊதியம் கொண்ட நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு மன்னர் சார்லஸ் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார். இந்த மாத ஊதியத்துடன் அவர்களுக்கு 600 பவுண்டுகள் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு
குறித்த தொகையானது மன்னரின் தனிப்பட்ட வருவாயில் இருந்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அரண்மனையில் குறைந்த ஊதியம் பெறும், துப்புரவு ஊழியர்கள், உணவு பரிமாறுபவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உதவி செய்பவர்கள் என நூற்றுக்கணக்கான ஊழியர்கள் 600 பவுண்டுகள் ஊக்கத்தொகை பெற உள்ளனர்.
@getty
குறித்த தொகையானது அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. மேலும், சாதாரண மக்கள் எவ்வாறு அவர்களின் பணத்தை சேமிப்பது என்பது போன்ற ஆலோசனைகள் வழங்கும் நிபுணர்களிடமும் மன்னர் சார்லஸ் இது தொடர்பில் விவாதித்ததாக கூறப்படுகிறது.
ஊழியர்களின் எண்ணிக்கையானது 491
இந்த நிலையிலேயே, ஆண்டுக்கு 30,000 பவுண்டுகளுக்கும் குறைவாக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 600 பவுண்டுகள் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார் மன்னர் சார்லஸ். அத்துடன், ஆண்டுக்கு 40,000 பவுண்டுகள் வரையில் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 400 பவுண்டுகள் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
@getty
மேலும், ஆண்டுக்கு 40,000 முதல் 45,000 பவுண்டுகள் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 350 பவுண்டுகள் ஊக்கத்தொகையும், குடியிருக்க வசதி மட்டுமே வழங்கப்படும் ஊழியர்களுக்கு 200 பவுண்டுகள் ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய ராஜகுடும்பத்தில் மொத்தமாக முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையானது 491 என கூறப்படுகிறது.
மன்னர் சார்லஸ் மட்டுமே, தமது கிளாரன்ஸ் மாளிகையில் 101 ஊழியர்களை பணியமர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.