அமேசானில் Royal Enfield பைக்குகள் வாங்கலாம்: 10 நகரங்களில் online சேவை விரிவாக்கம்
பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான Royal Enfield, தனது 350cc வரிசை பைக்குகளை இப்போது Amazon மூலம் நேரடியாக வாங்கும் வசதியை வழங்கியுள்ளது.
Classic 350, Bullet 350, Hunter 350, Goan Classic 350 மற்றும் Meteor 350 போன்ற மொடல்களை, ஆஹமதாபாத், சென்னை, ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யலாம்.
Amazon-ல் Royal Enfield-க்கு தனி Brand Store அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பயனர்கள் எளிதாக பைக்குகளை தேடவும், பணம் செலுத்தவும், விருப்பமான டீலர்ஷிப் மூலம் டெலிவரி மற்றும் சேவைகளை பெறவும் முடியும்.
Flipkart-வழியாகவும் Royal Enfield பைக்குகள் வாங்கும் வசதி ஏற்கனவே பெங்களூரு, குருகிராம், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் உள்ளது.
இதன் மூலம், Royal Enfield ஓன்லைன் சேவை 10 நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது.
இந்த டிஜிட்டல் விரிவாக்கம், GST 2.0 புதிய கட்டமைப்பின் கீழ் விலை குறைப்புகளுடன் இணைந்து வருகிறது.
Hunter 350-க்கு ரூ.14,867 குறைக்கப்பட்டு ரூ.1.38 லட்சத்தில் கிடைக்கிறது. Classic 350-க்கு ரூ.19,000 வரை விலை குறைப்பு, Meteor, Bullet மற்றும் Goan Classic 350-க்கும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
Royal Enfield, 2025-ஆம் ஆண்டு செப்டம்பரில் 1,24,328 பைக்குகளை விற்பனை செய்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 43 சதவீதம் அதிகரித்த விற்பனையை பதிவு செய்துள்ளது. இது, ஓன்லைன் சந்தையில் Royal Enfield-ன் தாக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |