Royal Enfield-யின் முதல் மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்! புரட்சி பாதையில் Flying Flea C6!
மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்ட் தங்களது முதல் மின்சார மோட்டார் சைக்கிள் Flying Flea C6-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
Flying Flea C6 என்ற இந்த தயாரிப்பு மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கான Royal Enfield-யின் புதிய துணை பிராண்டான Flying Flea-லின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
1940 ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் Flying Flea என்ற மோட்டார் சைக்கிளை நினைவுபடுத்தும் விதமாக இந்த புதிய மின்சார மோட்டார் சைக்கிளுக்கு Flying Flea C6 என்று பெயரிடப்பட்டுள்ளது.
This is how it looks. @royalenfield to enter the electric segment with a new vertical called the ‘Flying Flea’ and their first unveil- Flying Flea C6. BUT, the launch is in 2026. pic.twitter.com/xx7VDTMAZC
— OVERDRIVE (@odmag) November 4, 2024
Flying Flea C6 மின்சார மோட்டார் சைக்கிள்
Flying Flea C6 ரெட்ரோ-பியூச்சரிஸ்டிக்(retro-futuristic) வடிவமைப்பைக் கொண்டுள்ளது, வட்ட LED ஹெட்லைட் மற்றும் கிளாசிக் கிர்டர் ஃபோர்க்களுடன்(girder forks) உள்ளது.
இதன் 17-இன்ச் சக்கரங்கள் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மற்ற பெரிய பெட்ரோல் வண்டிகளில் இருந்து வேறுபடுத்துகிறது.
இந்த Flying Flea C6 மின்சார மோட்டார் சைக்கிள் நகர்ப்புற பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வசதியான பயண நிலை மற்றும் 100-150 கிமீ வரையிலான திட்டமிடப்பட்ட வரம்பை வழங்குகிறது.
.@royalenfield's first-ever electric motorcycle is here! Built for the city with the familiar classic lines. This is the C6 under the new electric brand Flying Flea. It's also the first of many to come.
— Sameer Contractor (@sameer_fc) November 4, 2024
More details: https://t.co/r30wYk6Qce pic.twitter.com/IMNQFgNzvP
இதில் கார்னரிங் ABS மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களின் சந்தை தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், Revolt, Matter, Oben, Ola, Raptee போன்ற பிராண்ட்களுக்கு போட்டிகளாக ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் Flying Flea C6 மின்சார இருசக்கர வாகனமும் களமிறங்க உள்ளது.
Flying Flea C6 மின்சார வாகனத்தின் விலை மற்றும் பிற விவரக்குறிப்புகள் சந்தையில் அதன் வெற்றியை தீர்மானிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |