ஆந்திர பிரதேசத்தில் ராயல் என்ஃபீல்டு புதிய தொழிற்சாலை., ரூ.2,500 கோடி முதலீடு
பிரபல மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுனமான ராயல் என்ஃபீல்டு, ஆந்திர பிரதேசம் திருப்பதி அருகே தடாவில் புதிய Greenfield Manufacturing Facility அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய உள்ளது.
தற்போது ராயல் என்ஃபீல்டின் (Royal Enfield) உற்பத்தி திறன் வருடத்திற்கு சுமார் 14.6 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் ஆகும். இது முழுமையாக பயன்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
அதனை விரிவாக்கும் நோக்கில், நிறுவனம் 2026 பிப்ரவரியில் தமிழ்நாட்டின் செய்யாரில் ரூ.958 கோடி முதலீடு செய்து, மொத்த உற்பத்தி திறனை 20 லட்சம் யூனிட்கள் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய ஆந்திரப் பிரதேச தொழிற்சாலை, எதிர்கால சந்தை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கட்டப்பட உள்ளது.
ராயல் என்ஃபீல்டின் நிர்வாக இயக்குநர் பி. கோவிந்தராஜன், “இந்த முதலீடு எங்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு ஊக்கமாக இருக்கும். ஆந்திர பிரதேச அரசின் ஆதரவுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
நிறுவனம் ஏற்கனவே ஆந்திர பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட விற்பனை மற்றும் சேவை நிலையங்கள் அமைத்துள்ளது. மேலும், 1,200-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய திட்டம், ஆந்திர பிரதேச மாநிலத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |