Royal Enfield Shotgun 650 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்., இந்தியாவில் 25 பைக் மட்டுமே கிடைக்கும்!
Royal Enfield அதன் Shotgun 650 பைக்கின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு Icon Motorsport's-உடன் இணைந்து நடுத்தர எடை கொண்ட ஷாட்கன் 650 பைக்கின் சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த லிமிடெட் எடிசன் பைக் 100 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படும். இவற்றில் 25 மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடப்படும்.
இந்த பைக் ஒரு சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வெள்ளை நிறத்துடன் Always Something தீம் பெறும்.
இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4,25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன் வழக்கமான மாடலின் விலை ரூ.3.59 லட்சம் முதல் ரூ.3.73 லட்சம் வரை செல்கிறது.
லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் கிடைக்கும் இந்த பைக்கில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
இந்த பைக்கில் இருக்கும் 648cc air-oil-cooled, parallel-twin engine அதிகபட்சமாக 46 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிள் ஒரு லிட்டர் பெட்ரோலில் 22 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Royal Enfield Shotgun 650 Icon Edition, Royal Enfield Shotgun 650 Limited Edition