மகாராணியின் கிரீடத்தை முடிசூட்டுவிழாவின்போது கமீலா அணிவதில் என்ன சிக்கல்?: பின்னணியின் கோஹினூர் வைரத்தின் வரலாறு...
மன்னர் சார்லஸ் முடிசூடும் அன்றே அவரது மனைவியாகிய கமீலாவும் ராணியாக முடிசூட உள்ளார்.
ஆனால், அவர் முடிசூடும் அன்று மகாராணியின் கிரீடத்தை அணிவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
அன்றே அவரது மனைவியாகிய கமீலாவும் ராணியாக முடிசூட உள்ளார்.
பிரித்தானிய மரபுப்படி ராணியாக முடிசூடப்படுபவருக்கு முதலாம் எலிசபெத் மகாராணியாரின் கிரீடம் அணிவிக்கப்படும்.
Image: 2016 Getty Images
ஆனால், கமீலா முடிசூடப்படும் அன்று அவர் அந்த கிரீடத்தை அணிவதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
அதற்கு முக்கிய காரணம், அந்த கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள விலைமதிப்பில்லா கோஹினூர் வைரம்.
இந்த கோஹினூர் வைரம், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டம் கொல்லூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது.
Image: Max Mumby/Indigo
இறுதியாக அது கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலமாக கைப்பற்றப்பட்டு, விக்டோரியா மகாராணியார் இந்தியாவின் பேரரசியாக அறிவிக்கப்பட்டபோது பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் ஒரு பகுதியானது.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், கமீலாவின் முடிசூட்டுவிழாவில் அவர் கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணிவாரானால், கிழக்கிந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்ட, வரலாற்றுச் சிறப்பு மிக்க கோஹினூர் வைரம் மக்களுக்கு பிரித்தானிய பேரரசை நினைவுபடுத்தக்கூடும் என்று கூறியுள்ளார்.
கமீலாவின் முடிசூட்டு விழாவும், கோஹினூர் வைரம் பதித்த கிரீடமும், காலனி ஆதிக்கத்தின் வலி மிக்க நினைவுகளை மீண்டும் கொண்டுவரக்கூடும் என்று கூறியுள்ளார் அவர்.
Image: Chris Jackson/Getty Images
ஐந்து நூற்றாண்டுகளாக, ஐந்து முதல் ஆறு தலைமுறையினர் பிரித்தானிய ஆட்சியின் கீழ் கொடுமைகள் அனுபவித்துள்ள நிலையில், இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு தங்கள் நாடு பிரித்தானிய ஆட்சியின் கீழ் பட்ட கஷ்டங்கள் குறித்து குறைந்த அளவிலான நினைவுகளே உள்ளன. ஆனால், இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் மறைவு மற்றும் புதிய ராணி கமீலாவின் முடிசூட்டு விழா ஆகியவை, இந்தியர்களில் சிலரை இந்தியாவின் பிரித்தானிய பேரரசு ஆட்சி செய்த கடந்த காலத்துக்கே கொண்டு சென்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆக, கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட மகாராணியாரின் கிரீடம் இந்தியர்களைப் புண்படுத்தும் என்பதால், ஒன்றில் அந்த கிரீடத்திலிருந்து கோஹினூர் வைரம் அகற்றப்படலாம் அல்லது கமீலா முடிசூடும் அன்று அந்த கிரீடத்தை அணிவதையே தவிர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.