பகை மறந்து இளவரசர் ஹரியை வாழ்த்திய ராஜ குடும்பம்: நச்சென்று நான்கு விடயங்கள்
இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி, தன் மனைவியுடன் சேர்ந்து குடும்பத்தினரை உலகறிய அவமதித்த நிலையிலும், அவரது பிறந்தநாளுக்கு ராஜ குடும்பம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள விடயம் மக்களைக் கவர்ந்துள்ளது.
குவியும் வாழ்த்துக்கள்
இளவரசர் ஹரி இம்மாதம் 15ஆம் திகதி தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், ராஜ குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்துச் சொல்வார்களா என்பதை அறிய மக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹரியின் பிறந்தநாளுக்கு ராஜ குடும்பம் அதிகாரப்பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவிக்கவில்லை.
ஆனால், இந்த ஆண்டு ராஜ குடும்பத்தின் சார்பிலும், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர் சார்பிலும் ஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். பகையை மறந்து ஹரியை வாழ்த்திய ராஜ குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
நச்சென்று நான்கு விடயங்கள்
என்றாலும், ஹரிக்கு ராஜ குடும்பம் வாழ்த்து தெரிவித்ததைக் குறித்த சில முக்கிய விடயங்களை விளக்கியுள்ளார் ராஜ குடும்ப நிபுணரான Rafe Heydel-Mankoo என்பவர்.
அதாவது, ராஜ குடும்பம் ஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியது உண்மைதான். அதற்காக அவர்கள் பகையை முழுமையாக மறந்து அவருக்கு கூழைக் கும்பிடு போடவில்லை என்கிறார் அவர்.
ராஜ குடும்பத்தில், மூத்த உறுப்பினர்களாக அரசில் பொறுப்பு வகிப்பவர்களுக்கு ஆண்டுதோறும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்படும். மற்றவர்களுக்கு முக்கியமான ஆண்டுகளில் மட்டும் வாழ்த்து தெரிவிக்கப்படும் என்கிறார் Rafe.
அதாவது, ஹரி தனது வாழ்வின் முக்கியமான மைல் கல் போன்ற 40ஆவது வயதை எட்டியதால்தான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறப்பட்டது. அது ராஜ குடும்பத்தில் வழக்கம்தான், மேகன் தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, அவருக்கு கூட வாழ்த்து தெரிவிக்கப்பட்டது என்கிறார் Rafe.
அடுத்ததாக, ஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவதற்காக தேர்வு செய்யப்பட்ட புகைப்படத்திலிருந்து மேகன் அகற்றப்பட்ட விடயம் குறித்து பேசிய Rafe, நிஜ வாழ்க்கையிலும் அப்படி நடக்கவேண்டுமென ஆசைப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்கிறார்.
என்றாலும், காலம் செல்லச்செல்ல ஹரிக்கும் வில்லியமுக்கும் இடையிலான பிரிவு மறையும், நெருக்கம் ஏற்படும் என்கிறார் Rafe. அதாவது, வயதாகும்போது, முதிர்ச்சி ஏற்படும். அப்போது இந்த சின்னச் சின்ன பிரச்சினைகள் எல்லாம் காணாமல் போய்விடும் என்கிறார் Rafe.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |