குளியலறையில் பிரசவித்த ராஜகுடும்ப உறுப்பினர்: யார் தெரியுமா?
ராஜகுடும்பத்தில் பெண்கள் வீட்டில் பிரசவிப்பது வழக்கமான ஒரு விடயம்தான்.
மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தே, தனது நான்கு பிள்ளைகளையும் வீட்டில்தான் பிரசவித்தார்.
ராஜகுடும்பத்துப் பெண்கள் வீட்டில் பிரசவிப்பது வழக்கமான ஒரு விடயம்தான்.
சொல்லப்போனால் வீட்டில் பிரசவிக்கும் ராஜ குடும்ப மரபை உடைத்ததே இளவரசி டயானாதான். அவர்தான் முதன்முதலில் மருத்துவமனையில் பிரசவித்தார்.
அப்படி குளியலறையில் பிரசவித்த ராஜ குடும்ப உறுப்பினர், இளவரசி Anneஇன் மகளான Zara Tindall.
Image: Getty
நடந்தது என்னவென்றால், Zaraவுக்கு திடீரென பிரவச வலி வர, மருத்துவமனைக்குச் செல்லக்கூட நேரமில்லை என்பதால் குளியலறையிலேயே தனது மூன்றாவது மகனை பிரசவித்தாராம்.
அதிர்ஷ்டவசமாக, பிரசவம் பார்க்கும் தாதி ஒருவர் சற்று அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்ததால், சீக்கிரமாக அவர் Zara வீட்டுக்கு வந்துவிட்டாராம்.
ஆனாலும், Zara பிரசவிக்கத் துவங்கி, குழந்தையின் தலை தென்பட்ட பிறகுதான் இரண்டாவது தாதி வந்து சேர்ந்தாராம்.
இந்த தகவலை Zaraவின் கணவரான Mike Tindall சமீபத்தில் தெரிவித்துள்ளார்.