நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட வளர்ப்பு தாயின் மகன்: இளவரசர் வில்லியம் இரங்கல்!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் பிரித்தானிய குடிமகன் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் இரங்கல் தெரிவித்துள்ளானர்.
பிரித்தானிய குடிமகன் உயிரிழப்பு
புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் தீவிரவாத தாக்குதலில் எட்வர்ட் பெட்டிஃபர்(Edward Pettifer) என்ற பிரித்தானிய குடிமகன் கொல்லப்பட்டார்.
லண்டனின் செல்சியா(Chelsea) பகுதியை சேர்ந்த 31 வயதான எட்வர்ட் பெட்டிஃபர் நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் படுகாயமடைந்து உயிரிழந்தார் என்று மெட்ரோபொலிட்டன் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
டிக்கி லெக்-போர்க்(Tiggy Legge-Bourke) என்று அழைக்கப்படும் எட்வர்ட் பெட்டிஃபரின் மாற்றாந்தாய் அலெக்சாண்ட்ரா பெட்டிஃபர் முன்னதாக இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரியின் வளர்ப்பு தாய் ஆவார்.
வேல்ஸ் இளவரசர் இரங்கல்
இந்நிலையில், நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் உயிரிழந்த எட்வர்ட் பெட்டிஃபரின் மரணம் எங்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது என இளவரசர் வில்லியம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரமான தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்ட பெட்டிஃபர் குடும்பத்தினருக்கும் அனைத்து அப்பாவிகளுக்கும் எங்கள் எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகள் உள்ளன என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
மன்னர் சார்லஸ் III ம் இந்த செய்தியால் மிகவும் வருத்தமடைந்தார் மற்றும் தனது தனிப்பட்ட இரங்கலை குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
பெட்டிஃபரின் தந்தை சார்லஸ், முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஆவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |