எக்கச்சக்கமாக எகிறிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு: எங்கிருந்து வருகிறது இவ்வளவு பணம்?
பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
130 மில்லியனைத் தாண்டிய சொத்து மதிப்பு
மன்னருக்கு 45 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக ஊதிய உயர்வு கிடைக்கவிருக்கும் நிலையில், ராஜ குடும்பத்தின் சொத்து மதிப்பு 53 சதவிகிதம் அதிகரித்து, 130 மில்லியன் பவுண்டுகளைத் தாண்டிவிட்டதாக அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
Image: Getty Images
மன்னராக நாட்டை ஆள்வதற்காக, மக்கள் வரிப்பணத்திலிருந்து மன்னருக்கு ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது.
அத்துடன், பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு சொந்தமான எஸ்டேட்டுகளிலிருந்து 1.1 பில்லியன் பவுண்டுகள் லாபம் கிடைத்துள்ளது.
Image: Getty Images)
இந்நிலையில், மன்னருக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படும் பணம், 2024, 25 காலகட்டத்தில் 86.3 மில்லியனாக உள்ளது.
அது, 2024,25 காலகட்டத்தில் 132 மில்லியன் பவுண்டுகளாக உயர இருக்கிறது.
இளவரசர் வில்லியமுக்கு Duchy of Cornwall estate என்னும் எஸ்டேட்டிலிருந்து 23 மில்லியன் பவுண்டுகள் வருவாய் கிடைத்தது.
அதிலிருந்து உக்ரைன் போர், துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் தொடர்பான தொண்டு நிறுவனங்களுக்கும், லண்டன் ஏர் ஆம்புலன்ஸ் சேவை, மன நலன் ஆதரவு நிறுவனங்கள் என பல சேவை அமைப்புகளுக்கும் அவர் நன்கொடை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Image: AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |