மறைந்த மகாராணியின் 97வது பிறந்தநாள்! புகைப்படத்துடன் நினைவுகூர்ந்த அரச குடும்பத்தினர்
பிரித்தானிய மன்னர் சார்லஸ், ராணி கன்சோர்ட் கமிலா உள்ளிட்ட அரசகுடும்பத்தினர், மறைந்த மகாராணி எலிசபெத்தின் பிறந்தநாளில் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
ராணி எலிசபெத்தின் பிறந்தநாள்
அரசகுடும்பத்தினர் இன்று மறைந்த மகாராணி எலிசபெத்தின் 97வது பிறந்தநாளை புகைப்படத்தை பகிர்ந்து நினைவு கூர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அரச குடும்பத்தினரின் ட்விட்டர் பக்கத்தில், 'இன்று கம்பீரமான ராணி எலிசபெத்தின் 97வது பிறந்தநாளில், அவரது நம்பமுடியாத வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை நாம் நினைவுகூருகிறோம்' என பதிவிட்டு, மகாராணியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
Today we remember the incredible life and legacy of Her Majesty Queen Elizabeth II, on what would have been her 97th birthday. pic.twitter.com/yXHV0QVzUu
— The Royal Family (@RoyalFamily) April 21, 2023
சாரா பெர்குசனின் பதிவு
அதேபோல் இளவரசர் ஆண்ட்ருவின் முன்னாள் மனைவி சாரா பெர்குசனும் தனது சமூக வலைதள பக்கத்தில், 'இன்று ராணியின் 97வது பிறந்தநாளாக இருந்திருக்கும், நான் அவளை நினைத்து அந்த நாளைக் கழிப்பேன்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் எங்கள் தேசிய வாழ்க்கையில் ஒரு நிலையான மற்றும் உறுதியான இருப்பு, எனக்கு அவர் ஒரு அற்புதமான மாமியார், நண்பர் மற்றும் ஆலோசகர். வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததை விட நான் அவரை இழக்கிறேன்' என கூறியுள்ளார்.
@Bettmann Archive
@LAURENT KOFFEL/GAMMA-RAPHO VIA GETTY