புத்தாண்டில் தலைக்குனிவிலிருந்து தப்பியது ராஜ குடும்பம்... வழக்குத் தொடராமல் விட்ட இளம்பெண்
பருவம் எய்தாத விர்ஜினியா என்னும் இளம்பெண்ணுடன் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதாக இளவரசர் ஆண்ட்ரூ மீது எழுந்த குற்றச்சாட்டு, அவருக்கு மட்டுமின்றி, ராஜ குடும்பத்துக்கே பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆண்ட்ரூ மீது குற்றம் சாட்டியிருந்த மற்றொரு பெண், அனுமதிக்கப்பட்ட காலகட்டத்துக்குள் அவர் மீது வழக்குத் தொடராததால், புத்தாண்டில் மீண்டும் சர்ச்சையில் சிக்க இருந்த ஆண்ட்ரூ சற்றே தப்பியுள்ளார்.
புத்தாண்டில் எதிர்பார்க்கப்பட்ட புதிய சிக்கல்
சிறுமிகளையும், இளம்பெண்களையும் சீரழித்து விருந்தினர்களுக்கு இரையாக்கிவந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். அவரது காதலி கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல். அப்படி எப்ஸ்டீனுடைய மாளிகையில் விருந்துக்குச் சென்றவர்களில் ஒருவர், இளவரசர் ஆண்ட்ரூ.
Credit: AFP
ஏராளம் இளம்பெண்களை ஏமாற்றி சீரழித்த எப்ஸ்டீன் மற்றும் அவரது காதலி கிஸ்லெய்னால், ஜோஹன்னா (Johanna Sjoberg) என்னும் இளம்பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார், இதற்கிடையில், இளவரசர் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் வீட்டில் வைத்து, ஜோஹன்னாவை தவறாக தொட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
இதுவரை விர்ஜினியா வழக்கு மட்டுமே வெளியே தெரிந்த நிலையில், நீதிபதியான Loretta Preska என்பவர், ஜோஹன்னா தொடர்புடைய ஆவணங்களை வெளியிடலாம் என அனுமதியளித்ததன் பேரில், ஜோஹன்னா குறித்த விடயம் வெளிவந்தது.
Credit: Tim Stewart
14 நாட்களில் ஜோஹன்னா தொடர்புடைய ஆவணங்களை வெளியிடலாம் என கடந்த மாத இறுதியில் நீதிபதி தெரிவித்ததால், புத்தாண்டில் ராஜ குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரச்சினை வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
சற்றே தப்பினார் ஆண்ட்ரூ
இளவரசர் ஆண்ட்ரூ மீது வழக்குத் தொடர ஜோஹன்னாவுக்கு கடந்த மாத இறுதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் ஆண்ட்ரூ மீது வழக்குத் தொடராமல் விட்டுவிட்டார்.
Credit: Rex
ஆகவே, புத்தாண்டில் ஜோஹன்னா வழக்குக்காக ஆண்ட்ரூ நீதிமன்றம் செல்ல நேரிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜோஹன்னா வழக்குத் தொடராததால் சற்றே தப்பியுள்ளார் ஆண்ட்ரூ.
Credit: PA
என்றாலும், ஏராளம் இளம்பெண்களை ஏமாற்றி சீரழித்த எப்ஸ்டீன் வழக்குத் தொடர்பான ஆவணங்களில் ஆண்ட்ரூவின் பெயரும் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் சிக்கல் முற்றிலும் தீர்ந்துவிட்டது என்று கூறமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |