மனைவியை விட்டுவிட்டு முன்னாள் காதலியின் திருமணத்துக்கு தனியாகச் சென்ற இளவரசர் வில்லியம்
தான் ஒரு காலத்தில் சீரியஸாக காதலித்த பெண்ணின் திருமணத்துக்கு தனியாக சென்றுவந்துள்ளார் இளவரசர் வில்லியம்.
முதல் சீரியஸ் காதல்
இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு முன் தனது கல்லூரிக் காலத்தின் முதன்முதலாக சீரியஸாக ஒரு பெண்ணைக் காதலித்தார் என்றால் அது Rose Farquhar என்ற பெண்ணைத்தான் என்கிறார்கள் அவரை அறிந்த பலர்.
2000ஆம் ஆண்டில் பல்கலையில் படித்த காலத்தில் வில்லியமும் Roseம் கொஞ்ச காலம் காதலித்தார்களாம். பிறகு இருவரும் பிரிந்துவிட்டாலும் நண்பர்களாகவே திகழ்கிறார்களாம்.
Image: KFB / The Mirror
ஆகவேதான் Roseஉடைய திருமணத்துக்குச் சென்றிருக்கிறார் வில்லியம். George Gemmell என்பவரை திருமணம் செய்யும் Roseக்கு வாழ்த்துக்கூற ஜேம்ஸ் பாண்ட் போல உடையணித்து அட்டகாசமாக வந்து இறங்கினாராம் வில்லியம்.
மனைவியைக் காணோம்
ஆனால் என்ன, திருமணத்துக்கு இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட் வரவில்லை.
Rose, தன் கணவருடைய முன்னாள் சீரியஸ் காதலி என்பதால் அவருடைய திருமணத்துக்கு இளவரசி கேட் செல்லவில்லையா என்பது தெரியவில்லை.
Image: Guy Levy/BBC/PA Wire