மகாராணியாரையே கேலி செய்யும் மேகன்: ராஜ குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர்
இளவரசர் ஹரியும் மேகனும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர், ராஜ குடும்பத்தில் சோகத்தை உருவாக்கியுள்ளது.
அந்த தொடரில், இளவரசர் வில்லியம் மீதும், அவரது மனைவி கேட் மீதும், மன்னர் சார்லஸ் மீதும் ஹரியும் அவரது மனைவி மேகனும் தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்.
முதன்முறை மகாராணியாரை சந்திக்கச் சென்ற மேகன்
அந்த தொடரின் ஒரு காட்சியில், தான் மகாராணியாரை முதன்முதலாக சந்திக்கும் காட்சியையே கேலிப்பொருளாக்கியிருக்கிறார் மேகன்.
தானும் ஹரியும் முதன்முறையாக மகாராணியாரை சந்திக்கப்போகும் காட்சியை விவரிக்கிறார் மேகன். காரில் செல்லும்போது மேகனிடம் உனக்கு மகாராணியாருக்கு மரபுப்படி வணக்கம் செலுத்தத் தெரியும் அல்லவா என்று கேட்டாராம் ஹரி.
Credit: NETFLIX
அதாவது, பெண்கள் கைகளை விரித்து குனிந்து மகாராணியாருக்கு வணக்கம் செலுத்தும் ஒரு பாரம்பரிய முறை உண்டு. அது curtsy என அழைக்கப்படுகிறது. அது உனக்கு செய்யத் தெரியுமா என்று கேட்டாராம் ஹரி.
மகாராணியாரையே கேலி செய்யும் மேகன்
உனக்கு curtsy செய்யத் தெரியும் இல்லையா என ஹரி தன்னிடம் கேட்டபோது, முதலில் ஹரி சும்மா விளையாட்டுக்குச் சொல்கிறார் என தான் நினைத்ததாகக் கூறுகிறார் மேகன்.
மத்திய காலகட்டத்தைச் சார்ந்த சில அமெரிக்க உணவகங்களில் இப்படி வணக்கம் செலுத்துவார்கள் என்று கேலியாகக் கூறும் மேகன், தலை குனிந்து, தான் எப்படி மகாராணியாருக்கு வணக்கம் செலுத்தினேன் என்பதை நடித்துக் காட்டுகிறார்.
Credit: NETFLIX
அவர் குனிந்த தலை நிமிரும்போது கேலியாக நகைக்க, அவர் மகாராணியாரை கேலி செய்கிறார் என்பதை உணரும் ஹரியே அதிர்ச்சியடைகிறார். அவர் குழப்பமான மன நிலையில் இருப்பதை அவரது முகம் காட்டுவதைக் காணலாம்.
இப்படி மகாராணியாரையே மேகன் கேலி செய்துள்ள விடயம், ராஜ குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. விடயம் என்னவென்றால், அந்த தொடரில் இன்னும் சில எபிசோடுகள் வெளியாக உள்ளன. அதில் ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு மேலும் என்னென்ன அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்பது தெரியவில்லை!
Credit: NETFLIX

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.