பிரித்தானிய ராஜ குடும்பத்து உறுப்பினர் ஒருவரால் உயிருக்கு போராடும் வயதான பெண்
பிரித்தானிய இளவரசர் எட்வர்டின் மனைவி சோஃபி வெசெக்ஸ் காரணமாக சாலை விபத்தில் சிக்கிய 80 வயது பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
40 அடி தொலைவுக்கு தூக்கி வீசப்பட்ட பெண்
சோஃபி வெசெக்ஸ் பயணப்பட்ட வாகனத்திற்கு பாதுகாப்பு அணிவகுப்பு மெற்கொண்ட்ட பொலிஸ் வாகனம் மோதியதில் குறித்த பெண்மணி 40 அடி தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டார் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Image: Matt Capon
சோஃபி வெசெக்ஸ் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் வருவதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண்மணி சாலையில் இறங்கியுள்ளார். ஆனால் கண்ணிமைக்கும் நொடியில் அந்த பாதுகாப்பு வாகனத்தில் ஒன்று மோதி, விபத்து ஏற்பட்டுள்ளது.
பல எண்ணிக்கையிலான பொலிஸ் வாகன பாதுகாப்புடன் சோஃபி வெசெக்ஸ் மின்னல் வேகத்தில் கடந்து செல்வதை பலர் நேரில் பார்த்துள்ளனர். குறித்த பெண்மணி அதிர்ஷ்டம் காரணமாகவே உயிர் தப்பியிருக்கிறார் எனவும்,
அந்த பகுதி சாலையானது எப்போதுமே பாதசாரிகளுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது, கவுன்சில் நிர்வாகத்திடம் இது தொடர்பில் புகார் அளித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டுமின்றி, இப்பகுதியில் சாலை விபத்தில் சிக்கி இதுவரை மூவர் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இந்த சந்திப்பில் சாரதிகள் கொஞ்சம் பொறுமையாக தங்கள் வாகனத்தை செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அவசரமாக விரைந்த சோஃபி வெசெக்ஸ்
விபத்தை அடுத்து லண்டன் ஆம்புலன்ஸ் சேவையும் அவசர மருத்துவ உதவி ஊழியர்களும் சம்பவயிடத்தில் திரண்டதுடன், குறித்த பெண்மணியை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
@getty
அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என தெரிவித்துள்ளதுடன் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். சோஃபி வெசெக்ஸ் எங்கே அவசரமாக விரைந்தார் என்பது குறிப்பிடப்படவில்லை,
ஆனால் பக்கிங்ஹாம் அரண்மனை தோட்டத்தில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் கலந்துகொண்ட விருந்துக்கு அடுத்த நாள், இந்த சாலை விபத்து நடந்துள்ளது.
விபத்தில் சிக்கிய பெண்மணி விரைவில் குணமடைய தாம் பிராத்தனை செய்வேன் என சோஃபி வெசெக்ஸ் தெரிவித்துள்ளார்.