மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட நிகழ்வையே மறக்கச் செய்த இனிமையான நிகழ்வு

United Kingdom King Charles III
By Balamanuvelan Nov 11, 2022 11:12 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட அசௌகரியமான நிகழ்வையே மறக்கச் செய்யும் ஒரு விடயம் நிகழ்ந்துள்ளது.

மன்னரையும் ராணியையும் திடுக்கிடவைத்த விடயம்

மன்னரும் ராணியும் இங்கிலாந்திலுள்ள யார்க் என்ற இடத்துக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு இளைஞர் மன்னர் சார்லஸ் மீது முட்டை ஒன்றை வீச, அந்த இடத்தில் அசௌகரியமான ஒரு சூழல் உருவானது.

ஆச்சரியம் என்னவென்றால், கையெழுத்துப்போடுவதற்காக வைத்திருந்த பேனா சரியில்லை என்பதற்காகவே அப்படிக் கோபப்பட்ட மன்னர் சார்லஸ், தன்னை நோக்கி முட்டை வீசப்பட்டப்போதுகூட, பரவாயில்லை, நாம் நம்முடைய வேலையைத் தொடர்வோம் என்று தொடர்ந்து மக்களுடன் அளவளாவப் புறப்பட்டதுதான்!

மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட நிகழ்வையே மறக்கச் செய்த இனிமையான நிகழ்வு | Royal Family Sweet Reason King

Image: 2022 Getty Images

ராஜ மரபை மீறி மன்னரும் ராணியும் செய்த செயல்

இந்நிலையில், ஒரு அசௌகரியமான சம்பவம் நடந்த பின்னர், மறக்க முடியாத, ஒரு இனிமையும் நெகிழ்ச்சியுமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஆம், மன்னரையும் ராணியையும் பார்ப்பதற்காக, கண் பார்வையில் தீவிரமான பிரச்சினைகள் கொண்ட ஐந்து வயது சிறுவன் ஒருவன் வந்திருக்கிறான்.

அவனுடைய பெயர் ஜேசன் (ason Tweedie-Long). மன்னரைப் பார்க்கவந்தாலும், கூட்டத்தில் தொலைவில் நின்ற ஜேசனால் மன்னரையும் ராணியையும் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை. இந்த தகவல் மன்னர், ராணி தம்பதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக, மரபுகளை மீறி, தடுப்பைத் தாண்டி ஜேசனைத் தங்களிடம் வரவழைத்துள்ளார் மன்னர். மன்னரின் கையை ஒரு பக்கமும், ராணியின் கையை மறுபக்கமும் பிடித்துக்கொண்டு ஜேசன் வாய் நிறைய புன்னகையுடன் நிற்கும் புகைப்படங்கள் யார்க் நகர ட்விட்டர் கணக்கில் வெளியாகியுள்ளன.

அந்தப் படத்தைப் பார்த்தவர்கள், மன்னர் மீது முட்டை வீசப்பட்ட நிலையிலும், மரபை மீறி அவர் அந்தச் சிறுவனை சந்தோஷப்படுத்தியதை சொல்லிச் சொல்லி அவரைப் புகழ்கிறார்கள்.

மற்றவர்களோ, அந்த சிறுவனும் அவனது குடும்பத்தினரும் தன் வாழ்நாள் முழுவதும் இந்த சம்பவத்தை மறக்கமாட்டார்கள் என்று கூறி மகிழவும் நெகிழவும் செய்கிறார்கள்.  

மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட நிகழ்வையே மறக்கச் செய்த இனிமையான நிகழ்வு | Royal Family Sweet Reason King

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US