திரைப்பட நடிகர் ஒருவர் குறித்து ராஜ குடும்பம் தெரிவித்துள்ள கருத்து
The Royal Family stated: ’Welcome to His Majesty's Secret Service, Mr Bond’: புதிய ஜேம்ஸ் பாண்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் குறித்து ராஜ குடும்பம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
திரைப்பட நடிகர் ஒருவர் குறித்து, ராஜ குடும்பத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வருக, ஜேம்ஸ் பாண்ட் அவர்களே...
என்னவோ தெரியவில்லை, இம்முறை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு ஒரு நடிகரை தேர்ந்தெடுக்கும் விடயம் தொடர்பில் பெருமளவில் செய்திகள் வெளியாகின.

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு கடும் போட்டியும் நிலவியது. பலர் அந்த கதாபாத்திரத்துக்கு பரிசீலிக்கப்பட்ட நிலையில், கடைசியாக, ராபர்ட் பாட்டின்சன் (Robert Pattinson, 40) என்பவர் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த செய்தி வெளியான சிறிது நேரத்தில், ராஜ குடும்பத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவு வெளியானது.
அதில், ’ Welcome to His Majesty's Secret Service, Mr Bond’ என குறிப்பிடப்பட்டிருந்தது!
Welcome to His Majesty's Secret Service, Mr Bond.
— The Royal Family (@RoyalFamily) November 16, 2026
அதேபோல, பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாமும், ராபர்ட் பாட்டின்சன் ஜேம்ஸ் பாண்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விடயம் தன்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும், இது பாட்டின்சனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளதாக, பிரதமரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.