ஹரியின் புத்தக வெளியீட்டிற்கு முன் அரச தம்பதியரின் வருகை: சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் நலம் விரும்பிகளுடன் சந்திப்பு
புத்தாண்டின் முதல் நாளில் சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்திற்கு வருகை புரிந்த அரச தம்பதியர் நலம் விரும்பிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சார்லஸ்-கமிலா தேவாலய வருகை
அரச தம்பதியரான சார்லஸ், கமிலா புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் திகதி, புனித மேரி மாக்டலீன் தேவாலயத்திற்கு செல்லும் அரச நடைமுறையை மீண்டும் நிலை நாட்டினர்.
தேவாலய விஜயத்தின்போது மன்னர் சார்லஸ் நலம் விரும்பிகளை வாழ்த்தினார். மன்னராக முதல் கிறிஸ்துமஸ் நடைப்பயணத்தில் சார்லஸ் பங்கேற்ற நிலையில், வேல்ஸ் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வருகை புரிந்தது நாட்டு மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது.
@Max mumby
இளைய அரச குடும்பத்தினருக்கு வரவேற்பு
சாண்ட்ரிங்ஹாம் தேவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த மக்கள் இளைய அரச குடும்பத்தாரை வரவேற்றனர். இளவரசர் ஹரியின் புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்பாக அரச தம்பதியர் தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டனர். வில்லியம் மற்றும் கேட் பொது உறுப்பினர்களிடம் இருந்து பரிசுகளை ஏற்றுக் கொண்டனர்.
@Samir Hussein/WireImage
@Getty Images
@Max mumby