மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம்
பிரித்தானிய மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடயம், ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு கவலையை உருவாக்கியுள்ளது.
ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார் மன்னர் சார்லஸ்.
புற்றுநோய் சிகிச்சையினால் மன்னருக்கு ஏற்பட்ட பக்கவிளைவுகளை மருத்துவர்கள் கண்காணிப்பதற்காக, வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்னர்.
புற்றுநோய்க்கான சிகிச்சையில் அது ஒரு சிறிய விடயம்தான் என்றாலும், அதுவும் ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு கவலையை உருவாக்கியுள்ளது.
மகாராணியாருக்குப் பின் பிரித்தானிய ராஜ குடும்பத்தின் அடையாளமாக இருப்பவர் மன்னர் சார்லஸ்.
அவர் பதவியேற்று குறுகிய காலத்துக்குள்ளேயே அவருக்கு புற்றுநோய் பாதித்த விடயமே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருக்கு சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் ராஜ குடும்ப உறுப்பினர்களை அது கடுமையாக பாதிக்கிறது.
மன்னரைப் பொருத்தவரை, தான் இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் பணிகள் பாதிக்கப்படுகிறதே என அவர் கவலைப்படுகிறார்.
ஆக, மற்ற ராஜ குடும்ப உறுப்பினர்கள் அவரது பொறுப்புக்களை பகிர்ந்துகொள்வதே அவர் தனது இலக்குகளை அடைய உதவியாக இருக்கும் என ராஜ குடும்ப விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |