இளவரசி இடுப்பில் கை வைத்த ராயல் ரசிகர்! சிரித்தபடி கடந்து சென்ற கேட்
இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் Scarborough நகரத்தில் இன்று பொதுமக்களை சந்தித்தனர்.
இளவரசி கேட்டை அணைத்தபடி தொட்டதன் மூலம் ராயல் ரசிகர் ஒருவர் எழுதப்படாத விதியை மீறினார்.
வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் இன்று (வியாழக்கிழமை) இங்கிலாந்தின் Scarborough நகரத்தில் உள்ளூர் மக்களை சந்திக்க வந்தனர். அப்போது, இளவரசி கேட் ராயல் ரசிகர்களுடன் செலஃபீ புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வின்போது, இளவரசியைத் தொட்டதன் மூலம் ஒரு வயதான ராயல் ரசிகர் எழுதப்படாத விதியை மீறியுள்ளார்.
Karwai Tang/PA
இளவரசி கேட்டுடன் செலஃபீ எடுத்துக்கொண்ட அந்தப் பெரியவர், இருவருக்கும் இடையில் தடுப்புகள் இருந்த போதிலும், இளவரசியின் இடுப்பில் கை போட்டு நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அந்த இடத்தில் எந்த முகச்சுளிப்பையும் காட்டாத இலவசரி கேட், பெரிதாக பொருட்படுத்தாமல் பதிலுக்கு அந்த பெரியவரின் தோல் மீது கை போட்டு சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு கடந்த சென்றார்.
ஆனால், அந்த நபர் எழுதப்படாத நெறிமுறையை மீறியதாக கூறப்படுகிறது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
James Whatling
PA