'ஆத்திரமும் கோபமும் வளர்ந்துள்ளது' ஹரி மற்றும் வில்லியம் இடையே அதிகரித்த அரச பகை
இளவரசர் ஹரி மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோரின் பரஸ்பர நண்பர் ஒருவர், சகோதரர்களின் நீண்ட கால பகை பற்றி சில அதிர்ச்சியூட்டும் கூற்றுக்களை கூறியதாக கூறப்படுகிறது.
அரச பகை
வில்லியம்- ஹரி சகோதரர்கள் நீண்ட காலமாக கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர், குறிப்பாக 2020-ல் இளவரசர் ஹரி அமெரிக்காவிற்குச் சென்றதிலிருந்து இது ஒரு அரச பகையாக வளர தொடங்கியது.
பின்னர், ஏப்ரல் 2021-ல் அவர்களது தாத்தா இளவரசர் பிலிப் இறந்தபோது அவர்கள் இங்கிலாந்தில் மீண்டும் சந்திக்கும்போதும் இந்த பகை தொடர்ந்தது.
இது குறித்து விவரங்களை வெளியிட்ட அரச நிபுணர் ராபர்ட் லேசி, 2021 ஏப்ரலில், இளவரசர் பிலிப்பின் மரண செய்தி சோகத்தை ஏற்படுத்தினாலும், ஹரி மற்றும் வில்லியம் தங்கள் தாத்தாவின் இறுதிச் சடங்கிற்காக குடும்பத்துடன் கூடும்போது சகோதரர்கள் இடையிலான பிரச்சினை முடிவுக்கு வரலாம் என நம்பிக்கை எழுந்தது என கூறினார்.
Getty Images
மீண்டும் தகராறு
ஆனால், இருவரும் பொதுமக்கள் பார்வையிலிருந்து விலகி கோட்டைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே அந்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின. அவர்கள் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக அவர் வெளிப்படுத்தினார்.
பின்னர் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் ஆகியோரின் நீண்டகால நெருங்கிய நண்பர் ஒருவரை மேற்கோள் காட்டிய அரச நிபுணர் ராபர்ட் லேசி, கோட்டைக்குள் ஹரியும் வில்லியமும் ஒருவரையொருவர் கடுமையாக பேசிக்கொண்டதாக கூறினார்.
"இருவருக்கும் இடையே உள்ள ஆத்திரமும் கோபமும் நம்பமுடியாத அளவிற்கு ஆழமாக வளர்ந்துள்ளது. பல கடுமையான மற்றும் காயப்படுத்தும் விடயங்கள் கூறப்பட்டுள்ளன," என்று லேசி பகிர்ந்து கொண்டார்.
நெட்ஃபிக்ஸ் ஆவணத்தொடர்
சமீபத்தில் வெளியாகியுள்ள ஹரி-மேகானின் நெட்ஃபிக்ஸ் ஆவணத்தொடரின் டிரெய்லர் காரணமாக, இளவரசர் வில்லியம் தனது இளைய சகோதரர் இளவரசர் ஹரி மீது 'மிகவும் கோபமாக' இருப்பதாகக் கூறப்படுகிறது.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் நிகழ்ச்சி நெட்ஃபிளிக்ஸில் இந்த மாதம் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட உள்ளது, முதல் பாதி டிசம்பர் 8 ஆம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 15 ஆம் தேதியும் வெளியாகும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.