மன்னர் சார்லஸுக்கு தலைவலியாக மாறியுள்ள அரச குடும்ப உறுப்பினர்!
மன்னர் சார்லஸ் அரச குடும்பத்திற்குள் மற்றொரு பெரிய சவாலை எதிர்கொள்கிறார்.
பிரித்தானியாவின் பிரபல ரக்பி வீரர் மைக் டிண்டால் 2011-ல் அரச குடும்ப உறுப்பினர் ஆனார்.
மிகவும் பணம் தேவைப்படும் அரச குடும்ப உறுப்பினர்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்ததால், மன்னர் சார்லஸ் ஒரு சவாலை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
இளவரசி அன்னேவின் (மன்னரின் தங்கை) மகள் ஜாராவின் கணவர் மைக் டின்டால் தான் அந்த நபர். அவர் I’m A Celebrity - Get Me Out Of Here என்ற தொலைகாட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சி கூடிய விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
Getty Images
இது குறித்து விமர்சித்துள்ள அரச நிபுணர் டேனிலா எல்சர், "மன்னர் சார்லஸின் கெட்ட கனவு.." என்ற தலைப்பில் கருத்துப் பகுதியை எழுதினார். அதில், மன்னர் சார்லஸ் அரச குடும்பத்திற்குள் மற்றொரு பெரிய சவாலை எதிர்கொள்கிறார் என்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறியுள்ளார்.
பொதுவாகவே பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள் யாரும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. அது அரச குடும்பத்திற்கு என்றும் பாதகம் விளைவிக்கும் செயலாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.
ஆனால் எதிர்பாராத விதமாக பிரபலமான ரியாலிட்டி டிவி தொடரின் நட்சத்திர நடிகர்கள் மத்தியில் அரச குடும்பத்தைச் சேர்ந்த மைக் டிண்டால் கலந்துகொண்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அடுத்தமாதம் பிரித்தானியாவில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகவுள்ளது.
Getty Images
மைக் டிண்டால் பிரித்தானியாவின் முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் ஆவார். 43 வயதாகும் பிரபலமான வீரர், 2003-ல் ரக்பி உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இருந்தார். அவர் 2011-ல் ஜாராவை திருமணம் செய்துகொண்டார்.