பிரித்தானியாவின் ராயல் கடற்படை இடைமறித்த ரஷ்ய எண்ணெய் கப்பல்
பிரித்தானியாவின் கடற்பகுதியில் இரண்டு ரஷ்ய கப்பல்களை ராயல் கடற்படை ரோந்து கப்பல் இடைமறித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
RFN ஸ்டோய்கி
பிரித்தானியாவின் ரோந்து நடவடிக்கைகளை சீர்குலைக்கும் முயற்சியாக, அதைக் கண்காணிக்கும் RAF விமானிகள் மீது ரஷ்ய உளவு கப்பலான யந்தரில் இருந்து லேசர்கள் செலுத்தப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி கடந்த புதன்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் நடந்துள்ளது.

24 மணி நேரமும் ரகசிய கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ராயல் கடற்படை கப்பலான HMS செவர்ன், கடந்த பதினைந்து நாட்களில் பிரித்தானியாவின் கடற்பகுதியில் ரஷ்ய போர்க்கப்பலான RFN ஸ்டோய்கி மற்றும் எண்ணெய் கப்பலான யெல்னியாவை இடைமறித்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய கப்பல்கள் டோவர் ஜலசந்தி வழியாகவும், மேற்கு நோக்கி ஆங்கிலக் கால்வாய் வழியாகவும் பயணித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது பிரான்சின் பிரிட்டனி பகுதியில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் HMS செவர்ன், தூரத்திலிருந்து தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், எதிர்பாராத எந்தவொரு செயலுக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ரஷ்ய உளவு
பிரித்தானிய கடல் எல்லைக்கு அச்சுறுத்தலாக ரஷ்ய நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், பிரித்தானிய ஆயுதப் படைகள் ஆங்கிலக் கால்வாயிலிருந்து உயர் வடக்கு வரை ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், யந்தர் உளவு கப்பல் பிரித்தானியாவுக்கு அருகில் வருவதாக பாதுகாப்பு செயலாளர் எச்சரித்ததைத் தொடர்ந்து, பிரித்தானியா வேண்டும் என்றே ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.

ஸ்கொட்லாந்தின் வடக்கே பிரித்தானிய கடல் எல்லைக்குள் ரஷ்ய உளவு கப்பல் நுழைந்ததாகவும், கடந்த சில வாரங்களாக பிரித்தானியாவின் கடல் எல்லைக்குள் நுழைந்ததாகவும் ஹீலி தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டில் இதுவரை யந்தர் கப்பல் பிரித்தானியா கடற்பகுதியில் நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறை என்றும் அவர் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |