இளவரசர் ஹரியின் தலை வழுக்கையை விமர்சித்த நபர்: பழிக்குப் பழி வாங்கிய ஹரி
Royal photographer Arthur Edwards has revealed how Prince Harry got his revenge: ராஜ குடும்ப புகைப்படக் கலைஞரான ஆர்தர் எட்வர்ட்ஸ், இளவரசர் ஹரி தன்னை பழிக்குப் பழி வாங்கிய ஒரு விடயம் குறித்து பகிர்ந்துள்ளார்.
ஐம்பது ஆண்டுகளாக ராஜ குடும்ப உறுப்பினர்களை புகைப்படம் எடுத்து வருபவர் புகைப்படக் கலைஞரான ஆர்தர் எட்வர்ட்ஸ்.
இந்நிலையில், இளவரசர் ஹரி தன்னை பழிக்குப் பழி வாங்கிய ஒரு விடயம் குறித்து பகிர்ந்துள்ளார் எட்வர்ட்ஸ்.
பழிக்குப் பழி வாங்கிய ஹரி
ஒருமுறை இளவரசர் ஹரி, நியூசிலாந்துக்கு சென்றிருந்தபோது, சிறுபிள்ளைகளுடன், கையில் பெயிண்ட் தொட்டு காகிதத்தில் பதிக்கும் விளையாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டே இருந்த அவர், சட்டென எழுந்து, தனது கையை எட்வர்ட்ஸ் தலையில் வைத்துள்ளார்.
எட்வர்ட்ஸின் தலையில் அப்படியே பெயிண்ட் தடம் பதிந்துள்ளது. பிள்ளைகள் அனைவரும் சத்தமாக சிரித்துவிட, அதிர்ச்சியடைந்தாலும், சிரித்துக்கொண்டே சமாளித்த எட்வர்ட்ஸ், பின்னர் தனியாக இருக்கும்போது, ஏன் அப்படிச் செய்தீர்கள் ஹரி என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஹரி, என் தலை வழுக்கையாகிக்கொண்டே செல்வதாக நீங்கள் தொலைக்காட்சியில் இன்று கூறினீர்கள், அதனால்தான் அப்படிச் செய்தேன் என்று கூறியுள்ளார்.
உடனே, நீங்கள் நேற்று ஒரு பெண்ணிடம் கூறியதைத்தான் நான் இன்று தொலைக்காட்சியில் கூறினேன் என்று எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.
அதாவது, முந்தைய தினம், ஒரு பெண் ஹரியிடம், நீங்கள் அப்படியே உங்கள் தந்தையைப் போல காணப்படுகிறீர்கள் என்று கூற, பதிலுக்கு ஹரி, என் தந்தையைப் போல என் தலையும் வழுக்கையாகிக்கொண்டே செல்கிறது என்று கூறியுள்ளார்.
ஆக, நான் அதைத்தான் தொலைக்காட்சியின் கூறினேன் என்று எட்வர்ட்ஸ் கூற, நான் அந்தப் பெண்ணிடம் அப்படிக் கூறியது உண்மைதான், ஆனால், அதை நான் முழு உலகத்துக்கும் சொல்ல விரும்பவில்லை என்றாராம் ஹரி!