சின்னஞ்சிறு வயதில் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்ட குட்டி இளவரசரும் இளவரசியும்: நெகிழவைத்த காட்சி
உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட மகாராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள, குட்டி இளவரசர் ஜார்ஜுக்கும், அவரது தங்கையான இளவரசி சார்லட்டுக்கும் அனுமதியளிக்கப்பட்டது.
பிள்ளைகள், பெரியவர்களைப்போல ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொண்ட விடயம் மக்களை நெகிழச்செய்துள்ளது.
தங்கள் பாட்டியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற குட்டி இளவரசர் ஜார்ஜும், இளவரசி சார்லட்டும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்ட காட்சிகள் மக்களை நெகிழவைத்துள்ளன.
ராஜகுடும்ப ஆலோசகர்களின் வற்புறுத்தலின்பேரில் வருங்கால மன்னரான குட்டி இளவரசர் ஜார்ஜும், இளவரசி சார்லட்டும் மகாராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.
Prince George and Princess Charlotte chatting to each other? pic.twitter.com/VeeVqToZVL
— Belle (@RoyallyBelle_) September 19, 2022
இந்நிலையில், அண்ணனும் தங்கையும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசிக்கொள்ளும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அந்த காட்சிகள் மக்களை நெகிழச் செய்துள்ள நிலையில், மகாராணியார் தன் பேரப்பிள்ளைகளைக் குறித்து நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார் என ஒருவரும், இந்த சின்னஞ்சிறு வயதில் இளவரசர்கள் முதிர்ச்சியுள்ளவர்கள் போல நடந்துகொண்ட விதம் என்னை பெருமையடைய வைக்கிறது என மற்றொரு ராஜகுடும்ப ரசிகரும் சமூக ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.