ராஜ குடும்பத்தில் இருந்து இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்: சார்லஸ் மன்னரிடம் பட்டியல்
ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற கருத்துடைய மன்னர் சார்லஸ், தற்போது ராஜ குடும்பத்து உறுப்பினர்களில் பதவியை பறிக்கும் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செயல்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை
எதிர்வரும் 6ம் திகதி சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா முன்னெடுக்கப்பட இருக்கிறது. உலகமெங்கிலும் இருந்து 2,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவானது ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக கூடும் ஒரு வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.
@getty
ஆனால், முடிசூட்டு விழாவிற்கு பின்னர், செயல்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைக்க மன்னர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பட்டியல் ஒன்றும் அவர் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இளவரசர் எட்வர்ட் மற்றும் சோஃபி, அத்துடன் சகோதரியான இளவரசி ஆன் கூட பதவி பறிப்பில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. மேலும், தமது இரு மகன்கள், அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் கொண்ட ஒரு தனிப்பட்ட குழுவை உருவாக்க மன்னர் திட்டமிட்டிருக்கலாம் எனவும், ஐரோப்பிய நாடுகளில் ராஜ குடும்பங்களில் இவ்வாறான நடவடிக்கையே வென்றுள்ளதாகவும் கூறுகின்றனர்.
@getty
குடும்பத்தில் இணைக்கும் பணிகள்
இதன் அடிப்படையில் மன்னர் சார்லஸ், கமிலா, வில்லியம், கேட், ஹரி மற்றும் மேகன் ஆகியோரின் ஒரு செயல்படும் உறுப்பினர்கள் குழு உருவாக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
ஆனால் ஹரி- மேகன் தம்பதி செயல்படும் உறுப்பினர்கள் வரிசையில் இருந்து விலகி தற்போது அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். அவர்களை மீண்டும் குடும்பத்தில் இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் கூறுகின்றனர்.
@getty
இருப்பினும், இந்த விவகாரத்தில் மன்னர் என்ன முடிவுக்கு வருவார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கிறார்கள் ராஜ குடும்பத்து விசுவாசிகள்.