இளவரசர் பிலிப்பின் வெளிவராத அரிய புகைப்படங்களை பகிர்ந்த ராயல் குடும்பத்தினர்!
இளவரசர் பிலிப்பின் மரணத்தை தொடர்ந்து அவருக்கு மரியாதை செய்துவரும் ராயல் குடும்பத்தினர், இதுவரை வெளிவராத அவருடைய அரிய புகைப்படங்களை சமூகக் வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
வேல்ஸ் இளவரசர் மற்றும் கார்ன்வாலின் டச்சஸ் சார்லஸ், கேம்பிரிட்ஜின் டியூக் மற்றும் டச்சஸ் இளவரசர் வில்லியம் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை ஆகிய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் புதிய படங்கள் பகிரப்பட்டுள்ளன.
பிரித்தானிய ராணி மற்றும் இளவரசர் பிலிப் தங்கள் ஏழு பேரக்குழந்தைகளுடன் 2018-ஆம் ஆண்டில் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்.
இடமிருந்து வலமாக இளவரசர் ஜார்ஜ், இளவரசர் லூயிஸ், இளவரசி சார்லோட், லீனா டிண்டால் மடியில் வைத்திருக்கும் இஸ்லா பிலிப்ஸ் மற்றும் மியா டிண்டால் மற்றும் பின்னால் நிற்பது சவன்னா பிலிப்ஸ்.
எடின்பர்க் டியூக் மற்றும் ராணி இருவரும் கேம்பிரிட்ஜ் டியூக் மற்றும் டச்சஸ், இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோருடன் விண்ட்சரில் 2015-ல் எடுக்கப்பட்ட புகைப்படம்.
எடின்பர்க் டியூக் 1966-ல் வேல்ஸ் இளவரசர் சார்ல்சுடன் போலோ விளையாடும்போது எடுக்கப்பட்ட படம்.
2011-ல் இளவரசர் வில்லியமின் திருமண நாளில் வேல்ஸ் இளவரசருடன் எடின்பர்க் டியூக் சிரிக்கும் படத்தை கிளாரன்ஸ் ஹவுஸ் பகிர்ந்துள்ளது.
2012-ல் டெர்பி விழாவில் இளவரசி பீட்ரைஸ் மற்றும் இளவரசி யூஜெனியுடன் இணைந்து இளவரசர் பிலிப் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பக்கிங்ஹாம் அரண்மனை பக்லிர்ந்துள்ளது.
Over the course of his life, The Duke of Edinburgh was associated with 992 organisations in areas including technology, conservation, education and the welfare of young people.
— The Prince of Wales and The Duchess of Cornwall (@ClarenceHouse) April 13, 2021
Take a look back at the life and work of The Duke of Edinburgh on @RoyalFamily. pic.twitter.com/Ll4yBQa4Kp