தண்டவாளத்தை கடக்கும் பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய காவலர்
உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தை கடந்த வயதான பெண்ணை காவலர் ஒருவர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார்.
உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் சனிக்கிழமையன்று, தண்டவாளத்தை கடக்கும் முயற்சியில் ரயில் மோதவிருந்த வயதான பெண்ணை, ரயில்வே பொலிஸ் படை அதிகாரி அவரை காப்பாற்றினார். இந்த சம்பவம் முழுவதும் பிளாட்பாரத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள 37 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஒரு பொலிஸ் அதிகாரியும் மற்றொரு நபரும், தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என்று எதிர் பிளாட்பாரத்தில் இருப்பவர்களிடம் கூறுகின்றனர்.
ஆனால், அப்பெண் அதனை கண்டுகொள்ளாமல் தண்டவாளத்தை கடந்தார். அடுத்த ஓரிரு வினாடிகளில் அதே தண்டவாளத்தில் றையில் ஒன்று அதிவேகமாக வர, அந்த அதிகாரி பிளாட்பாரத்தின் விளிம்பிற்கு விரைந்து வந்து சிவப்பு நிறப் புடவையில் ஒரு வயதான பெண்ணை மேலே இழுத்து தூக்கினார்.
அவரை பிளாட்பாரத்தில் இழுக்கும் அந்த நொடியில் ரயில் அவரை கடந்தது. இருவரும் தரையில் அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் கூடுகிறது.
आरपीएफ कर्मी की सतर्कता और तत्परता से बचाई गई महिला की जान!
— Ministry of Railways (@RailMinIndia) June 18, 2022
झांसी मंडल के ललितपुर स्टेशन पर पटरी पार कर रही एक बुजुर्ग महिला को वहां तैनात रेलवे सुरक्षाकर्मी ने अपनी जान पर खेलकर बचाया।
सभी से अनुरोध है कि एक से दूसरे प्लेटफॉर्म पर जाने के लिए फुट ओवर ब्रिज का उपयोग करें। pic.twitter.com/HZUCEXvbjs
வீடியோவை ட்வீட் செய்த ரயில்வே அமைச்சகம், "ஆர்பிஎஃப் வீரர்களின் விழிப்புணர்வு மற்றும் உடனடி நடவடிக்கையால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது ... அனைவரும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்கு செல்ல ஃபுட் ஓவர் பிரிட்ஜைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளது.
நேற்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த வீடியோ ட்விட்டரில் 89,000 முறை பார்க்கப்பட்டுள்ளது. அதிகாரியின் துணிச்சலை பயனர்கள் பாராட்டியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022