287 ரன் இலக்கு வைத்த SRH! 242 ஓட்டங்கள் வரை வந்து தோல்வியுற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
இஷான் கிஷன் 106
ஐபிஎல் 2025 சீஸனின் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 286 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய இஷான் கிஷன் (Ishan Kishan) 106 (47) ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 67 (31) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 1 ரன்னில் அவுட் ஆனது ராஜஸ்தான் ராயல்சுக்கு பேரிடியாக இருந்தது.
Never. Back. Down 🔥 pic.twitter.com/n9atUkDI9E
— Rajasthan Royals (@rajasthanroyals) March 23, 2025
அடுத்து வந்த கேப்டன் ரியான் பராக் 4 ஓட்டங்களிலும், நிதிஷ் ராணா 11 ஓட்டங்களிலும் வெளியேறினர். எனினும் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் கூட்டணி ஐதராபாத் பந்துவீச்சை சூறையாடியது.
சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் வாணவேடிக்கை
வாணவேடிக்கை காட்டிய சஞ்சு சாம்சன் (Sanju Samson) 37 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
அரைசதம் விளாசிய துருவ் ஜூரெல் (Dhruv Jurel) 35 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கும்.
Gave it his all. 💗 pic.twitter.com/2Q8CXHEhXC
— Rajasthan Royals (@rajasthanroyals) March 23, 2025
அதன் பின்னர் களம் கண்ட ஹெட்மையரும், ஷுபம் துபேயும் சரமாரியாக சிக்ஸர்களை பறக்கவிட்டனர். எனினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 242 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.
இதனால் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ஹெட்மையர் 23 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 42 ஓட்டங்களும், ஷுபம் துபே 11 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 34 ஓட்டங்களும் விளாசினர்.
An epic run-fest goes the way of @SunRisers 🧡
— IndianPremierLeague (@IPL) March 23, 2025
The Pat Cummins-led side registers a 4️⃣4️⃣-run win over Rajasthan Royals 👏
Scorecard ▶ https://t.co/ltVZAvInEG#TATAIPL | #SRHvRR pic.twitter.com/kjCtGW8NdV
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |